மாநில செஸ் போட்டிக்கு கோத்தகிரி மாணவி தேர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாநில செஸ் போட்டிக்கு கோத்தகிரி மாணவி தேர்வு

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோத்தகிரி:கோத்தகிரி அரவேணு அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும், 8ம் வகுப்பு மாணவி, செஸ் போட்டியில் மாநில போட்டிக்கு தேர்வானார்.கோத்தகிரி அரவேணு அரசு உயர்நிலைப்பள்ளியில், 8ம் வகுப்பு படித்துவரும் மாணவி ரீனா. இவர், மாவட்ட அளவிலான போட்டியில், ஐந்துமுறை முதலிடத்தில் வெற்றி பெற்றுள்ளார். கடந்த, 5ல், கோவையில் நடந்த மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்ற இவர், மூன்றாவது இடத்தில் வெற்றிபெற்று, சென்னையில் நடந்த மாநில போட்டியில் பங்கேற்றார்.இந்த வெற்றியின் மூலம், குன்னுார் கல்வி மாவட்டம் அளவில், மாநில போட்டியில் பங்கேற்ற முதல் மாணவி என்ற பெருமையை பெற்றுள்ளார். மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துவரும் ரீனாவுக்கு, கோத்தகிரி கேசலாடா அரசு துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயசீலன் பயிற்சிக்கான உதவியை அளித்துள்ளார்.குடும்ப வறுமையை அறிந்த அரவேணு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ேஹமாவதி, உடற்கல்வி ஆசிரியை சகிலா பேபி பயண செலவு உள்ளிட்ட உதவிகளை செய்துள்ளார். சாதித்துவரும் மாணவி ரீனாவுக்கு, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X