சபரிமலை விவகாரம்; பிரமாண்ட பேரணி: தடையை மீறியதால் பரபரப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சபரிமலை விவகாரம்; பிரமாண்ட பேரணி: தடையை மீறியதால் பரபரப்பு

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 சபரிமலை விவகாரம்; பிரமாண்ட பேரணி: தடையை மீறியதால் பரபரப்பு

ஊட்டி:ஊட்டியில், 'சபரிமலை காப்போம்' என்ற கோஷத்துடன், ஐயப்ப பக்தர்கள் பிரமாண்ட பேரணி நடத்தினர்; போலீசாரின் தடைமீறி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.'ஆண்கள், பெண்கள் பேதமில்லாது சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபாடு செய்து கொள்ளலாம்' என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பானது உலகம் முழுவதும் உள்ள சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மட்டுமல்ல; பிற மக்களிடையே பெரும் கொந்தளிப்பு, மனவேதனையை உண்டாக்கி உள்ளது. ' இந்த தீர்ப்பு தொடர்பாக, மறு சீராய்வு மனு தாக்கல் செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, அனைத்து ஐயப்ப பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஊட்டியில், 'சபரிமலை காப்போம்' இயக்கம் சார்பில், ஏ.டி.சி.,யில் கண்டன முழக்கம், பேரணி நடந்தது. முன்னதாக, 'சாமியே சரணம் ஐயப்பா; சபரிமலை காப்போம்,' என, பக்தர்கள் கோஷம் எழுப்பியவாறு துவங்கிய பேரணி, மணிக்கூண்டு வரை செல்ல மட்டுமே போலீசார் அனுமதி கொடுத்தனர். ஆனால், தடையை மீறி பக்தர்கள் பதாகைகளை ஏந்தியவாறு மாரியம்மன் கோவில், கேசினோ சந்திப்பு, ஸ்டேட் பாங்க் சாலை வழியாக ஐயப்பன் கோவில் வரை சென்று, பேரணியை நிறைவு செய்தனர்.
முன்னதாக, மணிக்கூண்டு அருகே, தடைமீறி பேரணி சென்ற போது, போலீசாருக்கும்; பக்தர்களுக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.சபரிமலை காப்போம் இயக்கத்தின் உறுப்பினர் மோகன் கூறுகையில், ''சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பானது சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மட்டுமல்ல, இந்து மக்களிடையே மனவேதனையை உண்டாக்கி இருக்கிறது. உடனடியாக மறு சீராய்வு மனு தாக்கல் செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். பேரணியில், பெண்கள் உட்பட, 2,000க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X