கு.மா.வாரியத்திற்கு ரூ.2 கோடி வாடகை பாக்கி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கு.மா.வாரியத்திற்கு ரூ.2 கோடி வாடகை பாக்கி

Added : அக் 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு, 2 கோடி ரூபாய் வரை, வாடகை பாக்கி உள்ளதால், பரா
மரிப்பு பணிகளை செய்ய முடியாமல், அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
சென்னையில், சாலையோரம் வசிப்போர், நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்து வசிப்போர் உட்பட, வீடுகள் இல்லாதவர்களை கணக்கெடுத்து, அவர்கள் குடிசை மாற்று வாரியம் மூலம், அடுக்குமாடி குடியிருப்புகளில் மறு குடியமர்வு செய்யப்படுகின்றனர்.மறு குடியமர்வு செய்வோருக்கு, குறைந்தபட்சம், 250 ரூபாய் முதல், அதிகபட்சம், 5,000 ரூபாய் வரை, மாத வாடகையாக, வாரியம் வசூல் செய்கிறது.
வியாசர்பாடி கோட்டத்தில், 18 அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும், 8,588 பேர், 1982ல் இருந்து, தற்போது வரை, சரிவர வாடகை செலுத்துவதில்லை.இதனால், குடிசை மாற்று வாரியத்திற்கு, வாடகை வருவாயாக வர வேண்டிய, 2.07 கோடி ரூபாய், வசூலாகாமல் நிலுவையில் உள்ளது,
தற்போது தெரியவந்து உள்ளது.இந்த வாடகை வருவாய் வராததால், குடியிருப்புகளில், பராமரிப்பு பணிகள் செய்ய முடியாமல், அதிகாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து, குடிசை மாற்று வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:குடிசை மாற்று வாரியத்தில், வீடு வாங்கிய நபர் இறந்த பின், அங்கு வசிக்கும் வாரிசுதாரர்கள், சொத்து பிரச்னையில் வாடகை செலுத்துவதில்லை. ஒதுக்கீடு பெற்றவர் வீட்டை விற்பனை செய்து விடுகிறார். அந்த வீட்டை வாங்கிய நபர், வாடகை செலுத்துவதில்லை.இவ்வாறு பல்வேறு காரணங்களால், வாடகைதாரர்கள் எங்களுக்கு வாடகை செலுத்துவதில்லை.
வாடகை வசூல் செய்யும் பணியில், பில் கலெக்டர், 12 பேர் இருக்க வேண்டும். ஆனால், பணியாளர் பற்றாக்குறையால், 2 பேர் மட்டுமே உள்ளனர்.அதனால், எங்களால் திறம்பட வாடகை வசூல் செய்ய முடியவில்லை. மூன்று மாதங்களுக்கு மேல், வாடகை செலுத்தாத நபர்களுக்கு, இறுதி கட்ட விசாரணை, 'நோட்டீஸ்' பிரிவு, 4, 5ன் கீழ் ஜப்தி, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது.
வீட்டிற்கான குடியிருப்பு ஆணையையும் ரத்து செய்ய முடியும். ஆனால், குடிசை மாற்று வாரியம், 'நோட்டீஸ்' கொடுப்பதோடு சரி. ஜப்தி நடவடிக்கை எதுவும் எடுப்பதில்லை. இதனால், நாளுக்குநாள் வசூலிக்க வேண்டிய நிலுவை, அதிகரித்துக் கொண்டே போகிறது.இவ்வாறு அவர்
தெரிவித்தார்.
- -நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
14-அக்-201807:22:54 IST Report Abuse
Bhaskaran வரி காட்டலேன்னா சாதாரணமக்கள் மேல் நடவடிக்கை எடுக்கிறீங்க குடிசை மாற்றுவாரியத்துக்கு போவதற்கு பயம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X