போக்குவரத்து திட்ட அறிக்கை: அவகாசம் நீட்டிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து திட்ட அறிக்கை: அவகாசம் நீட்டிப்பு

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கோயம்பேடு பகுதிக்கான, ஒருங்கிணைந்த புதிய போக்குவரத்து வரைவு திட்டத்துக்கான அறிக்கை தயாரிக்கும் கால அவகாசம், டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
கோயம்பேட்டில் புறநகர் பேருந்து நிலையம், காய், கனி, பூ, உணவு தானிய மொத்த விற்பனை அங்காடி வளாகம் ஆகியவை உள்ளன.இந்த வளர்ச்சி திட்டங்களால், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து, கோயம்பேடு பகுதிக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை, வெகுவாக
அதிகரித்துள்ளது.இதனால், அங்கு மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு தீர்வாக, மாதவரம், வண்டலுார் கிளாம்பாக்கம் ஆகிய இடங்களில், புதிய பேருந்து நிலையங்கள் உருவாக்கப்படுகின்றன.
இருப்பினும், கோயம்பேடு பகுதியில், போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வாக, ஒருங்கிணைந்த புதிய போக்குவரத்து செயல்திட்டம் உருவாக்கப்படும் என, அரசு அறிவித்தது.
இதற்கான பணிகளை, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.இதில், போக்குவரத்து செயல் திட்டத்தை தயாரிப்பதற்காக, எல் அண்ட் டி உள்கட்டமைப்பு பொறியியல் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்நிறுவனம், போக்குவரத்து பிரச்னைகள் தொடர்பான, கள ஆய்வுகளை நடத்தி முடித்து உள்ளது.இதன் அடிப்படையில், அந்நிறுவனம் இடைக்கால அறிக்கையை, சி.எம்.டி.ஏ.விடம் தாக்கல் செய்துள்ளது. இதில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் குறித்து, சமீபத்தில் நடந்த உயர் அதிகாரிகள் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.மேலும், இதற்கு ஒப்புதல் அளிப்பதுடன், அந்நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய தவணை தொகைகளை விடுவிக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
மேலும், இறுதி அறிக்கை அளிப்பதற்கான கால அவகாசம், நவம்பர் இறுதிக்குள் என வழங்கப்பட்டிருந்ததை, டிசம்பர் இறுதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது.இறுதி அறிக்கை கிடைத்த
வுடன், 2018 - 19 நிதி ஆண்டில், போக்குவரத்து மேம்பாட்டு திட்டங்களை அறிவிக்க, சி.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளது.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X