கணவன் தற்கொலை: மனைவி கவலைக்கிடம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவன் தற்கொலை: மனைவி கவலைக்கிடம்

Added : அக் 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே குடும்பத்தகராறு முற்றி கணவன், மனைவி இருவரும் விஷம் குடித்தனர். இதில், கணவன் இறந்தார். மனைவி கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கன்பாளையம் ஊராட்சி கென்னடி வீதியில் வசித்தவர் செந்தில்குமார், 43; கட்டட தொழிலாளி. இவரது மனைவி ஆனந்தி, 33; டெய்லரிங் தொழில் செய்து வந்தார்.குடிப்பழக்கம் உடைய செந்தில்குமாரால் அடிக்கடி குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது. நேற்று முன்தினம் குடித்து விட்டு வந்த செந்தில்குமாரால் மீண்டும் பிரச்னை எழுந்தது. இதனால் விரக்தி அடைந்த ஆனந்தி, சாணிப்பவுடர் கலக்கிய நீரை குடித்து, தற்கொலைக்கு முயன்றார்.செந்தில்குமாரும் சாணிபவுடர் தண்ணீரை குடித்தார். இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், செந்தில்குமார் இறந்தார். ஆபத்தான நிலையில் ஆனந்தி சிகிச்சை பெற்று வருகிறார். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனு. கூடுவாஞ்சேரி. இந்த மாதிரியான நிகழ்வுகள் ஏழைகள் வாழும் இடங்களில் அதிகமாக நடைபெறும். இது அனைத்து இந்தியா முழுவதும் நிகழும் நிகழ்ச்சி. இது போன்ற ஒவ்வொரு சம்பவத்தையும் வெளியிட்டால் படிப்பதற்கு இருப்பத்து நாலு மணிகள் போதாது. தயவுசெய்து இந்த மாதிரியான செய்திகளைத் தவிர்கவும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X