'நீட்'டுக்கு, 'ஸ்மார்ட்'டா வகுப்பெடுங்க... தேற்றுமா இந்த பயிற்சி?ஒரு மாசமா கிடைக்கல, 'வி' சாட் லிங்க்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'நீட்'டுக்கு, 'ஸ்மார்ட்'டா வகுப்பெடுங்க... தேற்றுமா இந்த பயிற்சி?ஒரு மாசமா கிடைக்கல, 'வி' சாட் லிங்க்!

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

அன்னுார்:அன்னுார் வட்டாரத்தில், 'நீட்' மற்றும் ஜே.இ.இ., தேர்வுக்கான பயிற்சி துவங்கி ஒரு மாதம் ஆகியும், சேட்டிலைட் லிங்க் கிடைக்காததால் ஆசிரியர்கள் வேறு வழியின்றி, நேரடியாக வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.மருத்துவ பட்டப்படிப்பில் சேர, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., கல்வி நிறுவனங்களில், பி.இ., -- பி.டெக்., படிப்புகளில் சேர ஜே.இ.இ., தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
தமிழக அரசு, தமிழகம் முழுவதும், 412 பள்ளிகளில் நீட் மற்றும் ஜே.இ.இ., பயிற்சி மையங்களை அமைத்தது. சேட்டிலைட் லிங்க் மூலம் அந்த தனியார் பயிற்சி நிறுவனங்கள், 412 மையங்களிலும் நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுக்கு பயிற்சி அளிக்க, நாட்டின் முன்னணி பயிற்சி நிறுவனங்களுடன், பல கோடி ரூபாய் செலவில் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.ஆனால் அன்னுாரில், பயிற்சி துவங்கி ஒரு மாதம் ஆகியும் சேட்டிலைட் லிங்க் கிடைக்கவில்லை. இந்த மையத்தில் நீட் மற்றும் ஜே.இ.இ., பயிற்சியில் பங்கேற்க, 152 பேர் விருப்பம் தெரிவித்து, பெயர் பதிவு செய்துள்ளனர்.கடந்த செப்., 15ல் பயிற்சி வகுப்பு துவங்கிய போது மாணவர்கள் மிக குறைவாக வந்தனர்.
ஆனால் தற்போது, 70 சதவீதம் பேர் பயிற்சிக்கு வருகின்றனர்.'வி சாட் சேட்டிலைட்' மூலம், பள்ளியில் புரஜெக்டர், ஸ்கிரீன் அமைத்து பயிற்சி தரப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அன்னுார் பள்ளி மையத்தில், புரஜெக்டர் மற்றும் ஸ்கிரீன் அமைத்து ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்தப்பட்டது.ஆனால், பயிற்சி துவங்கி, ஒரு மாதம் ஆகியும், சேட்டிலைட் தொடர்பு இதுவரை கிடைக்காததால், வழக்கமான முறையில் நேரடியாக ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர்.ஸ்மார்ட் வகுப்பறையில் அமர்ந்து பழைய முறைப்படி பாடம் கற்பதால், மாணவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். மேலும், பழைய முறையில் பாடம் கற்பதால், நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளில் வெற்றி பெற முடியுமா என்ற கேள்வியும் மாணவர்கள் மனதில் எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X