புரட்டாசி கடைசி சனிக்கிழமை: பெருமாளுக்கு சிறப்பு பூஜை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புரட்டாசி கடைசி சனிக்கிழமை: பெருமாளுக்கு சிறப்பு பூஜை

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 புரட்டாசி கடைசி சனிக்கிழமை: பெருமாளுக்கு சிறப்பு பூஜை

புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி, பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமை விழாவை அடுத்து, பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் பக்தர்கள் நின்று, இரண்டு மணி நேரம் காத்திருந்து அரங்கநாதப் பெருமாளை வழிபட்டனர்.பெரியநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், அதிகாலை நடை திறக்கப்பட்டு பூதேவி, ஸ்ரீதேவி கரிவரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. பாலமலை ரங்கநாதர் கோவிலில் நடந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இடிகரை பள்ளிகொண்ட ரங்கநாதர் கோவில், திருமலைநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட சுற்றுவட்டார பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னுார் கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், பால், இளநீர், தயிர், சந்தனம், பன்னீர் போன்ற பொருட்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது. பின், அச்சம்பாளையம் சண்முகம் குழுவின் பஜனை நடந்தது. மதியம் 2,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.செம்மாணி செட்டிபாளையத்தில் பழமையான அப்பிச்சிமார் கோவிலில் சிரவை ஆதீனம் குமரகுருபர வாமிகள் , வாராஹி மணிகண்ட சுவாமிகள் ஆகியோர் அருளுரை வழங்கினர். மதியம் 3,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 22 கிராம மக்கள் இதில் பங்கேற்றனர்.- நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X