சிதிலமடைந்தது சாலை; சீக்கிரம் ஆகுமா வேலை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிதிலமடைந்தது சாலை; சீக்கிரம் ஆகுமா வேலை

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கருமத்தம்பட்டி:சூலுார் ஒன்றியம், கணியூர் பேரூராட்சியில் உள்ளது தண்ணீர் பந்தல். இந்த ஊருக்கு கருமத்தம்பட்டி அருகில், கொச்சின் பை-பாஸ் முதல், அருணை கார்டன் ரெஸ்டாரண்ட் அருகில் தொடங்கி, சுமார் 2.8 கி.மீ.,க்கு மண் சாலை உள்ளது.கடந்த ஓராண்டுக்கு முன்னர் இந்தச் சாலையில் கிராவல் பரப்பி, சரளை மண், செம்மண்கொட்டினர். பின்னர், விரைவில் தார் ஊற்றுவதாகவும் ஒப்பந்தகாரர்கள் கூறியுள்ளனர். ஆனால், ஓராண்டைக் கடந்தும் தார் ஊற்றும் பணிகள் நடைபெறவில்லை.கோடை மழை, தென்மேற்குப் பருவமழை என்று இரண்டும் கடந்த நிலையில், கிராவல் பெயர்ந்து, பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு சாலை, குண்டும் குழியுமாக மாறிவிட்டது.கற்கள் பரவிக்கிடப்பதால், இருசக்கர வாகனங்களின் டயர்களைப் பதம்பார்க்கின்றன. இப்பகுதியில் விசைத்தறிகள், சைசிங் மில் உள்ளிட்ட தொழிற்கூடங்களும், வழிநெடுகில் குடியிருப்புகளும் உள்ளன.எனவே, சூலுார் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், விரைவில் இந்தச் சாலையை தார்ச்சாலையாக மேம்படுத்தித் தரவேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X