வானகரம் சுங்கச்சாவடி விரிவாக்கம்:அதிகாரியால் நில எடுப்பு தாமதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வானகரம் சுங்கச்சாவடி விரிவாக்கம்:அதிகாரியால் நில எடுப்பு தாமதம்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

நில எடுப்பு அதிகாரியால், வானகரம் சுங்கச்சாவடி விரிவாக்க பணிகள் தாமதமாகி வருவதாக, புகார் எழுந்துள்ளது.
பெருங்களத்துார் - புழல் இடையிலான, சென்னை பைபாஸ் சாலை வழியாக, கோயம்பேட்டில் இருந்து செல்லும் அரசு மற்றும் ஆம்னி பஸ்கள், துறைமுகம் வந்து செல்லும் கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள் அதிகளவில் பயணிக்கின்றன.கார்கள், டூ வீலர்கள் போக்குவரத்தும் இச்சாலையில் அதிகம். இச்சாலையில், வானகரத்தில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு, வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த சுங்கச்சாவடியில், கட்டணம் செலுத்தும் கவுண்டர்கள் மிகவும் குறைவாக உள்ளது. இதனால், சுங்கக் கட்டணம் செலுத்துவதற்கு, குறைந்தபட்சம், 10 நிமிடம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்வதற்கு கூட, தனி வழி ஏற்படுத்தவில்லை. கழிவறை வசதிகளும் இல்லை.
இதனால், வாகன ஓட்டிகள், பஸ் பயணியர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தொடர் விடுமுறை, பண்டிகைக் காலங்களில், வெளியூர் செல்லும் வாகனங்களால், சுங்கச்சாவடியில் வாகனங்கள் அணிவகுப்பு தொடர்கிறது.கட்டணம் செலுத்துவதற்கு, ஒரு மணிநேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், குறித்த நேரத்திற்கு ஊர் செல்ல முடியாமல், பயணியர் அவதிக்குள்ளாகின்றனர்.
இதை கருத்தில் கொண்டு, சுங்கச்சாவடியை விரிவாக்கம் செய்வதற்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முன் வந்துள்ளது. இதற்காக, சுங்கச்சாவடியின் ஒருபுறத்தில் உள்ள தனியார் நிலங்களை கையகப்படுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.நிலம் கையகப்படுத்துவதற்கு, நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள், காஞ்சிபுரம் மாவட்ட நில எடுப்பு சிறப்பு அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆனால், பணிகளை முடிக்காமல், நில எடுப்பு சிறப்பு அதிகாரி, காலம் தாழ்த்துவதாக புகார் எழுந்துள்ளது. விரைவில் ஆயுதபூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் என பண்டிகைகள் வரவுள்ளன.இதனால், பயணியர், வாகன ஓட்டிகள் அவதி தொடரும் வாய்ப்புள்ளது. சுங்கச்சாவடி விரிவாக்க பணிகளை, விரைந்து முடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X