ஆவடியில் டெங்கு அபாயம் வருவாய் ஆணையர் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆவடியில் டெங்கு அபாயம் வருவாய் ஆணையர் ஆய்வு

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆவடி:ஆவடியில், வருவாய் நிர்வாக ஆணையர், நேற்று திடீர் ஆய்வு நடத்தினார்.
ஆவடி நகராட்சியில், குப்பை மேலாண்மை ஒப்பந்ததாரரின் பணி காலம் முடிந்துவிட்டது. இன்னும் புதிய ஒப்பந்ததாரர் இறுதி செய்யப்படவில்லை. இதனால், துப்புரவு பணி சரியாக நடக்காமல், நகரின் முக்கிய வீதிகள், குப்பை நிறைந்து காணப்படுகின்றன.
டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு காரணமான, 'ஏடிஸ்' கொசுப்புழுக்கள், பிளாஸ்டிக் கவர்கள், தேங்காய் ஒடுகளில் தேங்கும் நீரில், வேகமாக வளர்ந்து வருகின்றன. இதனால், டெங்கு அபாயம் நிலவுகிறது.இந்நிலையில், வருவாய்த்துறை நிர்வாக ஆணையர், சத்தியகோபால், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள், ஆவடியில், டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை வீடு, வீடாக சென்று ஆய்வு செய்தனர். இதில், ஒரு சில பகுதிகளுக்கு சென்ற அதிகாரிகள், பொதுமக்களுக்கு அறிவுரை கூறினர்.
இது குறித்து, வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் கூறியதாவது:கடந்த ஆண்டு டெங்கு பாதிப்பு அதிகமாக இருந்ததால், முதல்வர் உத்தரவின் படி, அக்., முதல் வாரத்தில் இருந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களையும், தொடர் ஆய்வுகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆவடியில் ஒருசில வீடுகளில், மார்பிள்ஸ் கடைகளில், கொசுப்புழுக்கள் இருந்தன. அந்த கடைகளுக்கு, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது.
ஆவடியில், டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணிக்கு, ஊழியர்கள் கூடுதலாக நியமிக்கப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X