ரோட்டில் பிரசவம்; சாக்கடையில் சிசு சடலம்: மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட தாய்க்கு சிகிச்சை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரோட்டில் பிரசவம்; சாக்கடையில் சிசு சடலம்: மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட தாய்க்கு சிகிச்சை

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 ரோட்டில் பிரசவம்; சாக்கடையில் சிசு சடலம்: மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட தாய்க்கு சிகிச்சை

உடுமலை:உடுமலை அருகே, வீதியில் நடந்த பிரசவத் தில், குழந்தை சாக்கடையில் விழுந்து இறந்தது; தாய்க்கு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே, சின்னவீரம்பட்டியில், நேற்று காலை, தொப்புள் கொடியுடன் பெண் சிசு சாக்கடையில் இறந்து கிடந்தது. அருகிலேயே, ரத்தம் சிந்தி, மயங்கிய நிலையில், பெண் ஒருவரும் படுத்திருந்தார்.பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
ஆம்புலன்ஸ்சில், உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.விசாரணையில், தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு, பாலமுத்துாரைச்சேர்ந்த, செந்தில் மனைவி ரேணுகாதேவி, 23, என தெரிந்தது. ஆறு ஆண்டுக்கு முன், திருமணம் நடந்துள்ளது. ஏற்கனவே, ஒரு பெண் குழந்தை உள்ளது.இரு ஆண்டுக்கு முன், திருப்பூருக்கு வந்து, பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். சொந்த ஊருக்கும் அடிக்கடி சென்று வந்துள்ளார்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர், நேற்றுமுன்தினம் மாலை, பஸ்சில் இருந்து இறங்கி, உடுமலை, சின்னவீரம்பட்டி பஸ் ஸ்டாப் நிழற்குடையில் அமர்ந்துள்ளார். அப்பகுதியில் சுற்றி வந்தவருக்கு, நள்ளிரவில் பிரசவ வலி ஏற்பட்டு, ரோட்டில் புரண்டுள்ளார். குழந்தை பிறந்தும், சுய நினைவு இல்லாமல், மயங்கியுள்ளார். அருகிலுள்ள, சாக்கடையில் குழந்தை விழுந்துள்ளது.சின்னவீரம்பட்டிற்கு எதற்கு வந்தார் என்பது தெரியவில்லை. சிகிச்சையில் இருப்பதால் போலீசாரால் தொடர்ந்து விசாரிக்க முடியவில்லை. பெற்றோருக்கும், கணவருக்கும் போலீசார் தகவல் கொடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X