'கலர் நகல்' கள்ள நோட்டு அமைந்தகரையில் பெண்கள் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'கலர் நகல்' கள்ள நோட்டு அமைந்தகரையில் பெண்கள் கைது

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

அமைந்தகரை:அமைந்தகரையில், 2,000 ரூபாய் கள்ள நோட்டை, மருந்தகத்தில் மாற்ற முயன்ற பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.
சென்னை, சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் வனிதா, 30. நேற்று முன்தினம் இரவு, அமைந்தகரை, ரயில்வே காலனி, 3வது தெருவில் உள்ள மருந்தகத்தில், 2,000 ரூபாய் நோட்டை கொடுத்து, பொருட்கள் வாங்கி உள்ளார்.அந்த நோட்டை பார்த்து சந்தேகமடைந்த ஊழியர்கள், போலீசாருக்கு தகவல்தெரிவித்தனர். போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, அந்த நோட்டை ஆய்வு செய்ததில், 2,000 ரூபாய் கள்ள நோட்டு என தெரியவந்தது.
பின், வனிதாவின் பையை ஆய்வு செய்ததில்,'கலர் நகல்' எடுக்கப்பட்டது போன்ற, 2,000 -
500 ரூபாய் நோட்டுகள், 36 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரியவந்தது.விசாரணையில், 'இந்த நோட்டுகள் அனைத்தும், கொளத்துாரைச் சேர்ந்த, அ.தி.மு.க., பிரமுகர் ஒருவர் கொடுத்தது' என, வனிதா கூறியுள்ளார். சந்தேகமடைந்த போலீசார், காவல் நிலையம்அழைத்து சென்று,
அவளிடம் விசாரித்தனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:வனிதாவும், அண்ணாநகர், சாந்தி காலனியைச் சேர்ந்த சத்தியலட்சுமி என்பவரும் சேர்ந்து, துரித உணவகம் நடத்தியுள்ளனர். அதில் நஷ்டம் ஏற்படவே, தலையணை வியாபாரம் செய்துள்ளனர்.பின், அதிக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு, கள்ள நோட்டு தயாரிப்பது எப்படி என, 'யூ -டியூப்'பில் வீடியோ பார்த்து, தெரிந்து கொண்டுள்ளனர். அவ்வாறு தயாரித்த கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற போது, வனிதா சிக்கி உள்ளார்.அ.தி.மு.க., பிரமுகர் கொடுத்தார் என கூறினால், போலீசார் விட்டுவிடுவர் என நினைத்து, அவ்வாறு கூறி இருக்கிறார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையடுத்து, வனிதா, சத்தியலட்சுமி ஆகிய இருவரையும், போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X