மனைவியின் கள்ளக்காதலன் கொலை: கணவன் உட்பட 5 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவியின் கள்ளக்காதலன் கொலை: கணவன் உட்பட 5 பேர் கைது

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

அன்னுார்:கோவை அருகே மனைவியின் காதலனை கொன்ற கணவன் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.கோவை மாவட்டம், சூலுார் அருகே, மேற்கு அரசூரை சேர்ந்த ஆறுமுகம் மகன் மணிகண்டன். 22. தனியார் நிறுவன டிரைவர். திருமணமாகவில்லை. இவரது நண்பர் ரஞ்சித், ரஞ்சித் மனைவிக்கும் மணிகண்டனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கடந்த, 3 ம் தேதி பேரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ரஞ்சித் புகார் செய்துள்ளார். போலீசார், மணிகண்டனையும், அந்த பெண்ணையும் அழைத்து அறிவுரை சொல்லி அனுப்பினர்.
நேற்றுமுன் தினம் பச்சாபாளையம், செய்யாங்குட்டையில் மணிகண்டன் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.அன்னுார் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். நேற்று காலையில், ரஞ்சித்குமார், 32. பச்சாபாளையம் கிராம நிர்வாக அலுவலர் காளிமுத்துவிடம் சரணடைந்தார். கிராம நிர்வாக அலுவலர், அவரை அன்னுார் போலீசாரிடம் ஒப்படைத்தார். ரஞ்சித் குமார், அளித்த வாக்குமூலத்தில், ''எனது மனைவியுடன் பழகாதே என்று மணிகண்டனிடம் பல முறை கூறியும் கேட்கவில்லை. எனவே, 11ம் தேதி இரவு நானும், எனது மனைவியின் தம்பி தர்மராஜ், உறவினர்கள் சக்திவேல் குமார், ரகுநாதன், பார்த்தீபன் ஆகியோருடன் அரசூர், தொழிற்பேட்டை அருகே மணிகண்டனை மது அருந்த அழைத்து சென்றோம். அங்கு அவனை அடித்து, பின்னர் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்தோம். ஆட்டோவில் வைத்து பச்சாபாளையம் குளத்தில் வீசி விட்டு சென்று விட்டோம்,'' என்று தெரிவித்துள்ளார்.இதையடுத்து, அரசூரைச் சேர்ந்த, அய்யாசாமி மகன் தர்மராஜ், 27, ரங்கசாமி மகன் சக்திவேல் குமார், 29, முத்துசாமி மகன் ரகுநாதன், 28, ரங்கசாமி மகன் பார்த்தீபன், 25, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X