ரூ.7 ஆயிரம் நஷ்டஈடு : தாசில்தாருக்குகோர்ட் உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ரூ.7 ஆயிரம் நஷ்டஈடு : தாசில்தாருக்குகோர்ட் உத்தரவு

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கடலுார்:வீட்டு மனையை சர்வே செய்து அத்து காட்டாத தாசில்தார் 7000 ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.காரைக்கால் கோவில் பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் சீத்தாராமன். இவருக்கு சொந்தமான வீட்டுமனை காட்டுமன்னார்கோவில் அடுத்த நந்திமங்கலம் கிராமத்தில் உள்ளது. இந்த வீட்டு மனையை சர்வே செய்து அத்து காட்டுமாறு தாலுகா அலுவலகத்தில் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி கட்டணம் செலுத்தினார். பல முறை தாலுகா அலுவலகம் சென்று தாசில்தாரை சந்தித்து அலைந்தும் அளந்து அத்து காண்பிக்கப்படவில்லை.அதனைத் தொடர்ந்து கடலுார் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர்மன்ற நீதிபதி லட்சுமிகாந்தம், உறுப்பினர்கள் எழிலரசி, பாபு ஆகியோர் விசாரித்து ஏற்கனவே பட்டா அளித்த பின், சர்வே செய்வதற்கான சேவை கட்டணம் பெற்றுக்கொண்டு அளந்து அத்து காண்பிக்காதது சேவை குறைபாடு எனவும், உடனடியாக அளந்து அத்து காண்பிக்க வேண்டும். இதனால் சீத்தாராமனுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கும், மன உளைச்சலுக்கும் 5000 ரூபாயும், முறையீட்டு செலவுக்கு 2000 ரூபாயும், 2 மாதத்திற்குள் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X