நமது கலாசாரத்தை காப்பது திருவிழாக்கள் தான்: தினமலர் வெளியீட்டாளர் கோபால்ஜி பேச்சு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நமது கலாசாரத்தை காப்பது திருவிழாக்கள் தான்: தினமலர் வெளியீட்டாளர் கோபால்ஜி பேச்சு

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 நமது கலாசாரத்தை காப்பது திருவிழாக்கள் தான்: தினமலர் வெளியீட்டாளர் கோபால்ஜி பேச்சு

விழுப்புரம்:இந்து கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்க, இந்து அறநிலைய துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை தினமலர் வெளியீட்டாளர் ஆர்.ஆர்.கோபால்ஜிபேசினார்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்துார்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரமத்தில் நடைபெற்ற நவராத்திரி நான்காம் நாள் விழாவில் பங்கேற்ற, சென்னை தினமலர் வெளியீட்டாளர் ஆர்.ஆர்., கோபால்ஜி பேசியதாவதுதியாகத்தோடு இந்த ஆசிரமத்தை நடத்தி வருகின்றனர். எனது வாழ்வில் நான் கண்டது, பணமிருக்கும் மனிதனிடம் பொருள் இருப்பதில்லை. அதே பொருள் இருக்கும் மனிதனிடம் நல்ல மனம் இருப்பதில்லை.தற்போது நிறைய இளைஞர்கள் இருந்தாலும், வேலை செய்யாமலே உள்ளனர். எண்ணம், மனதும் நன்றாக இருந்தால் தான் வாழ்வில் சாதித்து, பணி செய்ய முடியும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, நவரத்திரி விழா மட்டுமின்றி, தீபாவளி, அமாவாசை, பவுர்ணமி வரை கொண்டாடப்படுகிறது. அனைத்து நாட்டினரையும், நமது சனாதன இந்து தர்மம் தான் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.இதில் நமது பங்கு, பகவான் மீது நாம் வைத்துள்ள நம்பிக்கையே. திருநெல்வேலி புஷ்கர விழாவிற்கு, யாரையும் அழைக்கவில்லை. ஆனால், பல லட்ச கணக்கான மக்கள் வந்து நீராடினர். இது தான் பக்தி. இது தான் நமது நாட்டின் பலம். கும்பகோணம் மகா மகத்தின் போது, குளத்தில் கெட்ட பாக்டீரியாவை அழிக்கும் நல்ல பாக்டீரியா சக்திகள் இருப்பதாக, ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.இது நமது மதத்திற்கு கிடைத்துள்ள அற்புதமான வரம். நமது கலாசாரத்தை காப்பது திருவிழாக்கள் தான். பக்திக்கு தேவை பக்திதானே தவிர, பணமில்லை. பகவனாகிய பூரண சரணாகதிக்கு, பக்தி தான் தேவை. நாங்கள் 200 கிராமங்களில் கோவிலை கட்டி கொடுத்துள்ளோம். கடந்த 1991ம் ஆண்டில் இருந்து ஆண்டிற்கு 200 முதல் 300 வரை பூசாரிகளுக்கு பயிற்சி கொடுத்துள்ளோம்.
பூநுால் போட்டுள்ள அனைத்து ஜாதியினருக்கும் இங்கு பயிற்சி வழங்கப்படுகிறது. பல ஏக்கர் பரப்பளவில் உள்ள கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் பெரும்பாலும் ஆக்கிரமிப்புகளில் உள்ளது. இந்த நிலத்தை இந்து அறநிலைய துறை மீட்டு, குத்தகை பெயரில் விவசாயத்திற்கு விட்டு வருவாய் ஈட்டலாம். நமது வழிபாடுகள்தான் இந்து மதத்தை காக்கிறது.மனவலிமை இல்லாமல் துறவரத்தை மேற்கொள்ள முடியாது. சாரதா ஆசிரமத்தில் அதை கடைபிடித்து வருகின்றனர். மற்ற மதங்களில் ஒரு நிலைக்கு மேல் கேள்வி கேட்க முடியாது. ஆனால், இந்து மதத்தில் அது போல் இல்லை. அனைத்து நிலைகளிலும் தீர்வு உள்ளது.இவ்வாறு ஆர்.ஆர்.கோபால்ஜி பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X