நம்மை இயக்கும் சக்திதான் பக்தி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நம்மை இயக்கும் சக்திதான் பக்தி

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 நம்மை இயக்கும் சக்திதான் பக்தி

விழுப்புரம்:பக்திகளை நமக்குள் அதிகமாக வளர்த்து கொண்டால் தான், நம்பிக்கை அதிகமாகும் என உளுந்துார்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரமம் தலைவி யத்தீஸ்வரி ராமகிருஷ்ணா ப்ரிய அம்பா கூறினார்.உளுந்துார்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரமத்தில் நவரத்திரி விழாவின் நான்காம் நாளான நேற்று மாலை 4.00 மணிக்கு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து நடந்த விழாவிற்கு ஸ்ரீ சாரதா மகா வித்யாலயம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி செயலர் யத்தீஸ்வரி ஆனந்தா ப்ரேமா ப்ரியா அம்பா நவரத்திரி நிகழ்ச்சிகள் குறித்து அறிமுக உரையாற்றினார்.விழாவிற்கு தலைமை தாங்கிய ஸ்ரீ சாரதா ஆசிரமம் தலைவர் யத்தீஸ்வரி ராமகிருஷ்ணா ப்ரியா அம்பா பேசியதாவது;நவராத்திரி என்பது ஒன்பது நாள் அம்பாளின் பரிபூரண அருள் நிறைந்திருக்கும் பாலம் ஆகும். ஆன்மீகத்தை ஆராய்ந்து போகும் போது, பிரபஞ்சம் அனைத்தும் உன்னதமாக தெரிந்து விடும். அறிவியல் உலகில் ஆன்மீக சக்தியும் நிறைந்துள்ளது. இதை தான் ஞானிகள் செய்து வைத்திருந்தனர்.நமது வாழ்க்கையில் எண்ணற்ற லட்சியம், கற்பனைகள் இருக்கும். இதை இயக்கும் ஒரே சக்தி பகவான் சக்தி மட்டுமே. நமது குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் இயக்கும் சக்தி தான் பக்தி. பக்திகளை நமக்குள் அதிகமாக வளர்த்து கொண்டால் தான், நம்பிக்கை அதிகமாகும். நமது பண்பாட்டை தற்போது சினிமாக்காரர்கள் தான் சீர்குலைத்து வருகின்றனர். இளைஞர்களிடம் நல்ல வீரியம் உள்ளது. நீங்கள் மனதை ஒருநிலை படுத்தி, பக்தியின் உணர்வை அடைய வேண்டும். இளம் வயதில் இருந்தே குழந்தைகளுக்கு, பக்தி, பண்பாட்டை பெற்றோர்கள் போதிக்க வேண்டும். இது எங்களின் குருகுலத்தில் போதிக்கப்படுகிறது.இவ்வாறு யத்தீஸ்வரி ராமகிருஷ்ணா ப்ரியா அம்பா பேசினார்.விழாவில் சென்னை தினமலர் வெளியீட்டாளர் ஆர்.ஆர்., கோபால்ஜி சிறப்புரையாற்றினார். நீதிபதி சத்தியமூர்த்தி, ஜெயப்பிரியா சிட்பண்ட்ஸ் மேலாண்மை இயக்குனர் ஜெய்சங்கர் உட்பட குருகுல பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X