தந்தை அடித்து கொலை : பாசக்கார மகன் கைது | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தந்தை அடித்து கொலை : பாசக்கார மகன் கைது

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 தந்தை அடித்து கொலை : பாசக்கார மகன் கைது

மூங்கில்துறைப்பட்டு:திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில், தந்தையை அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அடுத்த கொடியனுாரைச் சேர்ந்தவர் கந்தன்(60) இவரது மகன் கோபி,36; வெளிநாடு சென்று திரும்பிய இவர், தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கடந்த ஓரராண்டாக தனது தந்தையிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த கோபி, தனது தந்தையிடம், மீண்டும் தகராறு செய்தார். ஆத்திரமடைந்த கோபி, தனது தந்தையை நெட்டி தள்ளினார். அதில் சுவற்றியில் மோதி கீழே விழுந்த கந்தன் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.தகவலறிந்த வடபொன்பரப்பி போலீசார் விரைந்து சென்று, கந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து கோபியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.தந்தையை அடித்து கொலை செய்த கோபிதந்தையை அடித்து கொலை செய்த கோபி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X