ரூ.500 கோடி மானியம் வழங்க வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.500 கோடி மானியம் வழங்க வலியுறுத்தல்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை:'தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்காக அரசு வழங்க வேண்டிய ரூ.500 கோடி நிலுவை மானியம் உடன் வழங்க வேண்டும்,' என தமிழ்நாடு கூட்டுறவு பண்டகசாலை ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அச்சங்க தலைவர் குப்புசாமி, பொது செயலாளர் வெங்கடாசலபதி ஆகியோர் தெரிவித்துள்ளதாவது:
தமிழக ரேஷன் கடைகள் நடத்தும் நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்களுக்கும், கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கும் பதவி உயர்வு, சீனியாரிட்டி அடிப்படையில் பாரபட்சமின்றி சம்பளம் வழங்க வேண்டும்.கூட்டுறவு சங்க தலைவருக்கு அடுத்த நிலையில் செயலாளர் பதவியை கட்டாயமாக்க வேண்டும். அனைத்து கூட்டுறவு பணியாளர்களுக்கும் பாரபட்சமின்றி தீபாவளி முன்பணமாக 8 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இவ்வாறு தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X