நெல்லையில் களைகட்டுது தாமிரபரணி புஷ்கரம் புனித நீராடிய அமைச்சர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நெல்லையில் களைகட்டுது தாமிரபரணி புஷ்கரம் புனித நீராடிய அமைச்சர்கள்

Added : அக் 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

திருநெல்வேலி:நெல்லையில் தாமிரபரணி புஷ்கரத்தை யொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகளவில்
உள்ளது. அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் தங்களது கட்சியினருடன் வந்து புனித நீராடினர்.
குருபெயர்ச்சியால் தாமிரபரணியில் அக். 11 முதல் 23 வரையிலும் மகாபுஷ்கர விழா நடக்கிறது. திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி பாயும் 130 கி.மீ.,துாரம் உள்ள பல்வேறு படித்துறைகள், தீர்த்தக்கட்டங்களில் மக்கள் நீராடுகின்றனர்.
தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து மும்பை போன்ற இடங்களில் இருந்தும் பக்தர்கள் வரத்துவங்கியுள்ளனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் நேற்று காலையில் இருந்தே கூட்டம் அலைமோதியது.குறிப்பாக நெல்லை தைப்பூச மண்டபம், குறுக்குத்துறை, பாபநாசம், கல்லிடைகுறிச்சி, முக்கூடல், முறப்பநாடு என பல்வேறு படித்துறைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
நெல்லையில் புஷ்கர விழாவிற்கு வந்தவர்களுக்கு உணவு பற்றாக்குறை வரக்கூடாது என்பதற்காக பல்வேறு அமைப்பினர் 13 தினங்களும் மூன்று நேரமும் அன்னதானம் வழங்குகின்றனர்.
நிரம்பி வழியும் ஓட்டல்கள்
இதை தவிர நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில் ஓட்டல்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக நெல்லையின் பிரசித்தி பெற்ற அல்வா கடைகளில் போலீஸ் பாதுகாப்போடு வியாபாரம் நடக்கிறது. நெல்லையில் சிறிய தங்கும்விடுதிகள் முதற்கொண்டு பெரிய ஓட்டல்கள் வரையிலும் ரூம்கள் புக்காகி விட்டன. இதனால் குழுவாக வருபவர்கள் மண்டபங்கள், மடங்களில் தங்குகின்றனர். சிறிய வணிக நிறுவனங்களில் விற்பனை சூடு பிடித்துள்ளது.
ஆட்டோக்கள், வாடகை கார்கள், டெம்போ வாகனங்களில் டிரைவர்களும் பிசியாக உள்ளனர்.
புனித நீராடிய அமைச்சர்கள்
நெல்லை பாபநாசத்தில் நடந்த புஷ்கர விழாவை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் துவக்கிவைத்தார்.தமிழக அமைச்சர்கள் யாரும் வரவில்லை.மாவட்ட நிர்வாகமோ, கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளோ ஆரம்பத்தில் இருந்தே புஷ்கர விழாவிற்கு ஆதரவான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அறநிலையத்துறையினரும் கண்டுகொள்ளவில்லை.
இருப்பினும் பல்வேறு இந்து அமைப்புகள், துறவியர் சங்கங்களின் முயற்சியால் புஷ்கர விழாவிற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்துசெல்கின்றனர். நேற்று துாத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நீராடினார்.நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தமது கட்சியினருடன் வந்து நீராடினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
14-அக்-201807:25:28 IST Report Abuse
Bhaskaran திமுக தலைவர்கள் யாரும் இரவோடு இரவாக வரலியா அழகிரி கண்டிப்பாக வருவாரே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X