மகா புஷ்கர விழாவில் நடிகர் விஜய் தந்தை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மகா புஷ்கர விழாவில் நடிகர் விஜய் தந்தை

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருநெல்வேலி:''ஊழல் இல்லாத ஆட்சி கொடுக்கக்கூடிய தகுதி நடிகர் விஜய்க்கு உள்ளது,'' என அவரது தந்தையும், சினிமா இயக்குனருமான சந்திரசேகர் தெரிவித்தார்.
புஷ்கர விழாவினை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் தாமிரபரணி நதியில் நீராடி வழிபட்ட அவர் கூறியதாவது:புஷ்கரம் என்பது அறிவியலின் அடிப்படையில் நடக்கும் ஆன்மிகம். எல்லா நட்சத்திரங்களும் ஒன்று சேரும் நாள் புஷ்கர நாள். ஹிந்து தர்மத்தில் நல்லவனாக வாழ பல வழிகள் உள்ளன. பிறப்பால் நான் கிறிஸ்துவனாக இருந்தாலும், முதலில் நான் இந்தியன். இந்தியன் என்றால் ஹிந்து. மதம் என்பது இரண்டாவதுதான். கங்கை உற்பத்தியாகும் இடத்திற்கு மூன்று முறை சென்றுள்ளேன்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதும், வராமல் இருப்பதும் அவருடைய முடிவு. மக்களுக்கு யார் வேண்டுமானாலும் நன்மை செய்யலாம். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என அவர் எண்ணுகிறார். அதனால் அவர் அரசியலுக்கு வரலாம். ஊழல் இல்லாத ஆட்சி கொடுக்கக்கூடிய தகுதி விஜய்க்கு உள்ளது.இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X