நெல்லையில் பன்றிக்காய்ச்சல்: டாக்டர், குடும்பத்தினர் பாதிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நெல்லையில் பன்றிக்காய்ச்சல்: டாக்டர், குடும்பத்தினர் பாதிப்பு

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருநெல்வேலி:திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லுாரி டாக்டர் கார்த்திகேயன், 45, அவரது மனைவி, மாமனார், மாமியார் ஆகியோர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.
தோல்நோய் சிகிச்சை நிபுணரான கார்த்திகேயன், 45. மருத்துவக் கல்லுாரி அருகே ரஹ்மத்
நகரில் வசிக்கிறார். சில நாட்களாக அவருக்கு காய்ச்சல் இருந்தது. சோதனையில் பன்றிக்காய்ச்சல் இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவக்கல்லுாரி பன்றிக்காய்ச்சல் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.


குடும்பத்தினரும் பாதிப்பு



தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் இவரது மனைவி டாக்டர் பொன் கோகிலா, இவரது தயார், தந்தைக்கும் பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரிந்தது. நால்வருக்கும் பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக டீன் கண்ணன் தெரிவித்தார். இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.


எப்படி பரவியது



டாக்டர் கார்த்திகேயன் ரஹ்மத்நகரில் வீடு கட்டிவருகிறார். கட்டட பணிகளில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள்உள்ளனர். இதில் ஒருவருக்கு சில நாட்களாக காய்ச்சல் இருந்தது. அவரை டாக்டர் கார்த்திகேயன் பரிசோதித்திருக்கலாம் எனவும், அதன் மூலம் அவருக்கும் காய்ச்சல் பரவியிருக்கலாம் எனவும் சக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X