கூட்டுறவு தேர்தல்: ஸ்டாலின் கண்டனம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு தேர்தல்: ஸ்டாலின் கண்டனம்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:'உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக, அ.தி.மு.க., அரசுக்கு ஆதரவாக, கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்தப்படுவது, ஜனநாயகப் படுகொலை' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:தி.மு.க., தொடர்ந்த, கூட்டுறவு சங்க தேர்தல் வழக்கில், அ.தி.மு.க., அரசின்
தலையில், உயர் நீதிமன்றம் குட்டு வைத்தது. அதன் பிறகும், அராஜகங்கள், அதிகார துஷ்பிரயோகம் செய்து, தேர்தல் நடத்தப்படுவது, ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி இருக்கிறது.
தி.மு.க., சார்பில் தாக்கல் செய்யப்படும் வேட்பு மனுக்கள், தகுந்த காரணங்கள் இன்றி நிராகரிக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க.,வினரின் வேட்பு மனுக்களை மட்டும் ஏற்று, உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக, மீண்டும் ஒருதலைபட்சமாக, கூட்டுறவு தேர்தலை நடத்தி வருவது, மிகுந்த கண்டனத்திற்குரியது. இந்த ஜனநாயக படுகொலையை, ஏற்றுக் கொள்ள முடியாது.
அ.தி.மு.க.,வினரின் தில்லுமுல்லுகளுக்கு துணைபோகும் அதிகாரிகள், நிச்சயம், சட்டப்படி நடவடிக்கைக்கு உள்ளாவர். தி.மு.க., சார்பில் தொடுக்கப்பட்ட வழக்குகளில், பல்வேறு கூட்டுறவு சங்கத் தேர்தல்களின், ஓட்டு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனவே, முறைகேடுகளுக்கு வித்திட்ட, கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் முடியும் வரை, வரும், 16ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள, தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல்கள் அனைத்தையும் ஒத்திவைக்க வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X