அடடே...! ஆச்சரியப்பட வைக்கும் 'ஸ்டார்ட் அப்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அடடே...! ஆச்சரியப்பட வைக்கும் 'ஸ்டார்ட் அப்'

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 அடடே...! ஆச்சரியப்பட வைக்கும் 'ஸ்டார்ட் அப்'

பள்ளியில் 'பெஸ்ட் ப்ரம் வேஸ்ட்' (best from waste) என்று நாமும் படித்துள்ளோம். நம் குழந்தைகளும் படிக்கின்றன. பல சிறிய சிறிய விஷயங்களை கற்றும் வந்துள்ளோம். கடைபிடிக்கிறோமா இல்லையா என்பது வேறு விஷயம்.தினமும் எவ்வளவோ பொருட்களை துாக்கி எறிகிறோம். ஆனால், அவற்றின் மூலம் வேறு ஏதாவது உபயோகமாக செய்ய முடியுமா? என்று
ஆழமாக யோசித்தது இல்லை, அதற்கு இந்த இயந்திர உலகத்தில் யாருக்கும் நேரமும் இருப்பதில்லை.ஆனால், இதற்காக சில ஸ்டார்ட் அப்-கள் தொடங்கப்பட்டு அவை வெற்றிகரமாக இயங்குகின்றன என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
டிவிஜ் (dwij)கடந்தாண்டு, துவக்கப்பட்ட இந்த 'ஸ்டார்ட் அப்' உபயோகப்படுத்தப் பட்ட ஜீன்ஸ் பேன்ட்களில் இருந்து பைகள் தயாரிக்க ஆரம்பித்துள்ளது. இந்தியா முழுவதும், ஏன் உலகம் முழுவதும் 'ப்ளாஸ்டிக்' ஒழிப்புக்கு வழி தேடி கொண்டிருக்கும் வேளையில் இது போன்ற 'ஸ்டார்ட் அப்'கள் பழைய ஜீன்ஸ்களை தேடிப்பிடித்து வாங்கி அவற்றை வாஷ் செய்து, அவற்றை பைகளாக தயாரிக்கின்றனர்.
கடந்த மூன்று மாதத்தில் மட்டும், 2000 ஜீன்ஸ் பேன்ட்களை, 300 பைகளாக மாற்றியுள்ளனர். ஒரு பை, 200 முதல் 300 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மாதம், 200 பைகள் வரை, இணையதளம் வழியாக விற்கின்றனர்.நாம் பலரும் வீட்டில் நமக்கு தேவைக்கு பேன்ட்களை பைகளாக தயாரிப்பது தெரிந்த வேலை என்றாலும், அதில் ஒரு தொழில் இருப்பதை நாம் மறந்து விட்டோம். ஆனால், இந்த கம்பெனியை ஆரம்பித்துள்ள சவும்யா அதை மறக்கவில்லை.
டுடுலேஜ் (doodlage)
டில்லியை சேர்ந்த இந்த 'ஸ்டார்ட் அப்' பழைய விலை மிகுந்த துணிகளிலிருந்து பேஷன் ஆடைகள், ஹோம் பர்னிஷிங் (திரைச்சீலைகள் போன்றவை), பைகள் தயாரிக்கிறது. இப்படி கவனமாக தயாரிக்கப்பட்ட பொருட்கள் 3,800 முதல் 14,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது குறிப்பிட்டதக்கது.
காஷா (kasha)
காஷா என்ற ஸ்டார்ட் அப் பழைய பனாரஸ் சேலைகளை வாங்கி அதிலிருந்து பார்டர்களை எடுத்து அதன் மூலம் ஸ்கார்ப், ஜாக்கெட்டுகள் போன்றவைகளை தயாரிக்கிறது. அவை, பல ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதுபோல், போரா (bora), சிந்தி (chindi), ஸ்கிராஃப்ஷாலா (scrapshala), ஆர்ஜின் (orgin), பயோப்ளாஸ்டெக் (bioplastech) பல ஸ்டார்ட் அப்கள் வந்துள்ளன, பல வந்து கொண்டிருக்கின்றன. நீங்களும் சிறிது மாற்றி யோசியுங்கள். உங்கள் ஸ்டார்ட் அப்-பும் இந்த பகுதியில் இடம் பெறும்.
புதிய விவசாய ஏற்றுமதி கொள்கை
விரைவில் வெளியிடப்படவிருக்கும் புதிய விவசாய ஏற்றுமதி கொள்கை, 2025ம் ஆண்டுக்குள் விவசாய ஏற்றுமதி மூலம் 100 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை அடைய முயற்சிக்கிறது. சிறிய விவசாயிகள் அதிகம் இதன் மூலம் பயனடையும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது விவசாய விளைபொருட்களின் ஏற்றுமதியில் பாதியளவு கடலுணவுப் பொருட்கள், மாமிச பொருட்கள், அரிசி ஆகியவையாக இருக்கிறது. இந்த புதிய கொள்கை நாட்டின், தேர்வு செய்யப்பட்ட, 100 மாவட்டங்களில் ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகங்களுக்கு: sethuraman.sathappan @gmail.com, அலைபேசி எண்: 098204-51259, ப்ளாக் sethuramansathappan.blogspot.co.in

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X