பயணிகள் சுரண்டப்படுவதை தடுக்க முயற்சி'நோ பில்; புட் ப்ரீ':ரயில்வே அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை| Dinamalar

தமிழ்நாடு

பயணிகள் சுரண்டப்படுவதை தடுக்க முயற்சி'நோ பில்; புட் ப்ரீ':ரயில்வே அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

Updated : அக் 14, 2018 | Added : அக் 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 பயணிகள் சுரண்டப்படுவதை தடுக்க முயற்சி'நோ பில்; புட் ப்ரீ':ரயில்வே அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

கோவை:கோவை ரயில்வே ஸ்டேஷனில், பயணிகள் வாங்கும் உணவு பொருட்களுக்கு அதிக தொகை வசூலிப்பதை தடுக்க, ரயில்வே நிர்வாகம் அதிரடியில் இறங்கியுள்ளது. ஒவ்வொரு கடையிலும், 'நோ பில்; புட் ப்ரீ' என்கிற வாசகம் அடங்கிய, 'ஸ்டிக்கர்' ஒட்டப்படுகிறது. இதனால், பயணிகள் ஏமாற்றப்படுவது, தடுக்கப்படுகிறது.
கோவை ரயில்வே ஸ்டேஷன் வழியாக, தினமும், 72 ரயில்கள் இயக்கப்படுகின்றன. பல ஆயிரம் பயணிகள் பயன்படுத்துகின்றனர். இவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஸ்டேஷனில் விற்கப்படுகின்றன.இதற்கென, நடைமேடை ஓட்டல்கள், 'பெட்டி ஷாப்' உள்ளிட்டவை, ஒப்பந்த அடிப்படையில் நடத்தப்படுகின்றன. ரயில்வே நிர்வாகம் நிர்ணயிக்கும் விலைக்கு, அனுமதிக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே விற்க வேண்டும்.
ஆனால், அதிக விலைக்கு விற்பது; தரமற்றப் பொருட்களை தள்ளிவிடுவது என, பயணிகள் தலையில் மிளகாய் அரைக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. கடைக்காரர்கள், 'பில்' தராததும், பொருட்கள் விலை பட்டியல் ஒட்டாததுமே இதற்கு முக்கிய காரணம்.அதனால், பொருட்களின் விலை பட்டியல் ஒட்டும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், அதிக விலைக்கு விற்பதாக புகார்கள் தொடர்ந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, 'பில்' தராதவர்கள் கடைகளில், உணவு இலவசம் என்ற 'ஸ்டிக்கர்' ஒட்டப்படுகிறது. இது, பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
சேலம் கோட்ட ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பயணிகளிடம் அதிக விலைக்கு பொருட்களை விற்பதும், 'பில்' தருவதில்லை எனவும் புகார்கள் வருகின்றன. 'பில்' தராவிட்டால், உணவு இலவசம் என, ஸ்டேஷன்களில் 'ஸ்டிக்கர்' ஒட்டியுள்ளோம். வேறு வழியின்றி, பில் கொடுத்தாக வேண்டும். பயணிகள் ஏமாற்றுவதும் தடுக்கப்படும்' என்றார்.

'டயல்' செய்யலாம்!
கடை ஒப்பந்ததாரர் பெயர், மொபைல் போன் எண்ணுடன் புகார் அளிக்க, 24 மணி நேரமும் செயல்படும், 138 என்கிற எண் மற்றும் உணவுப்பொருள் தர சோதனை அதிகாரியின் மொபைல் எண் அடங்கிய அறிவிப்பு 'நோட்டீஸ்', ஒவ்வொரு கடையிலும் ஒட்டப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
14-அக்-201807:11:00 IST Report Abuse
Bhaskaran பேருந்து நிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும் காலாவதியான உணவுப்பொருட்கள் போலி brand உணவுப்பொருட்கள் அதிகாரிகளின் ஆசைகளுடன் அதிலும் வெளியூர் பேருந்துகள் நிற்கும் உணவகங்களில் இந்த அக்கிரமம் சொல்லி மாளாது எனவே வெளியூர் செல்லுமுன் தெரிந்த கடைகளில் பிசுகட் பழம் வாங்கிச்சென்றால் இந்த தொந்தரவு இல்லை இல்லையெனில் islander சாப்பிடலாம் அதுவும் விலை அதிகம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X