'ஷாக்!' சிட்கோவில் திடீர் மின்வெட்டு:தொழில் துறையினர் அதிர்ச்சி| Dinamalar

தமிழ்நாடு

'ஷாக்!' சிட்கோவில் திடீர் மின்வெட்டு:தொழில் துறையினர் அதிர்ச்சி

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
'ஷாக்!' சிட்கோவில் திடீர் மின்வெட்டு:தொழில் துறையினர் அதிர்ச்சி

திருப்பூர்;முதலிபாளையம் 'சிட்கோ' வளாகத்தில், நேற்று முன்தினம் நான்கு மணிநேரம் ஏற்பட்ட மின்வெட்டு, தொழில் துறையினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.திருப்பூர், முதலிபாளையம் 'சிட்கோ' தொழில் வளாகத்தில், 200 நிறுவனங்கள் இயங்குகின்றன. நிட்டிங், பிரின்டிங், தையல், காம்பாக்டிங் என, ஆடை உற்பத்தி சார்ந்த அனைத்து நிறுவனங்களும் உள்ளன. இவ்வளாகத்தில், 24 மணி நேரம் தடையில்லா மின்சாரம், சீராக கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, 'சிட்கோ' வளாகத்தை நிர்வகிக்கும், 'டெக்கிக்', திருநெல்வேலி ராதாபுரத்தில், நான்கு மெகா வாட் உற்பத்தி திறனுள்ள காற்றாலை மின் உற்பத்தி கட்டமைப்பு நிறுவியுள்ளது. உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், மின் வாரியத்துக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில், திருப்பூர் சுற்றுப்புறத்தில், சில நாட்களாக, திடீர் மின்வெட்டு ஏற்படுகிறது. இதுவரை இல்லாத வகையில், நேற்று முன்தினம், மாலை, 6:00 மணி முதல் இரண்டு மணி நேரம், 'சிட்கோ'வுக்கு மின் சப்ளை நிறுத்தப்பட்டது.
'சிட்கோ' வளாக நிறுவனத்தினர் கூறியதாவது;தடையில்லா மின்சாரம் உறுதி என்பதால், பெரும்பாலான நிறுவனங்கள், கைவசம் இருந்த ஜெனரேட்டர்களை கூட விற்பனை செய்து விட்டன. முதல் முறையாக, தற்போது ஏற்பட்ட மின்வெட்டு, அதிர்ச்சியளிக்கிறது. ஜெனரேட்டர் இல்லாமலும், டீசல் விலை உயர்வால், ஜெனரேட்டர் இயக்க முடியாமலும், நிறுவனங்கள் தவிக்கின்றன. ஜெனரேட்டர் இயக்கினால், உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரிக்கும்; உற்பத்தி குறையும்.
சுயமாகவும், தனியாரிடம் கொள்முதல் செய்து மின்சாரம் வழங்கும் 'சிட்கோ'வுக்கு, மின் வாரியம், தொடர்ந்து தடையில்லா மின்சாரம் வினியாகிக்க வேண்டும்; இனி, மின்வெட்டு இருக்கக் கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
திருப்பூர் மின்பகிர்மான கோட்ட மேற்பார்வை பொறியாளர் சண்முகத்திடம் கேட்ட போது, 'முதலிபாளையம் 'சிட்கோ' வளாகத்தில், மின்வெட்டுக்கு வாய்ப்பில்லை,; ஒரு வேளை, 30 நிமிடம் மின்வெட்டு ஏற்பட்டிருக்கலாம்', என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X