மதுக்கடை பாரில் 'ரெய்டு'| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுக்கடை பாரில் 'ரெய்டு'

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

திருப்பூர்:திருப்பூரில் உள்ள, 'டாஸ்மாக்' மதுக்கடை 'பார்'களில் அதிகாரிகள் குழுவினர் அதிரடி ரெய்டு நடத்தி, அனுமதியற்ற 'பார்' மீது நடவடிக்கை எடுத்தனர்.திருப்பூரில், 238், 'டாஸ்மாக்' மதுக்கடைகள் உள்ளன;, 89்கடைகளில் மட்டும், அனுமதி பெற்ற பார்கள் உள்ளனகோர்ட் உத்தரவு, அரசு நடவடிக்கை, பொதுமக்கள் எதிர்ப்பு போன்ற காரணங்களால் கடந்தாண்டு மூடப்பட்ட மதுக்கடைகள், மீண்டும், ஆங்காங்கே திறக்கப்பட்டன.
மக்களின் எதிர்ப்பால், மதுக்கடைகள் திறப்பதே பிரச்னையாக இருந்ததால், அதிகாரிகள் தரப்பில், 'இடம் கிடைத்தால் போதும்' என்ற நிலையில், மதுக்கடைக்கு இடம் தருவோருக்கு 'பார்' நடத்த வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டது. இதனால், 'பார்' நடத்தும் உரிமத்துக்கு ஏலம் நடத்தவும் முடியவில்லை. நிலையற்ற இடம் என்பதால், சில இடங்களில், கட்சியினர் 'சிண்டிகேட்' அமைத்து, ஏலம் நடக்காமல் பார்த்துக் கொண்டனர்.
சில மாதமாக, பார் உரிமக்கட்டணத்தை, அதன் உரிமையாளர்கள் செலுத்தவில்லை. மாவட்டத்தில், சில இடங்களில் பார் தொகை வசூலிக்க முடியாமல், மதுக்கடைகளும் சேர்த்து மூடப்பட்டன.
இதற்கிடையில், நேற்று, சென்னை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் முருகன் தலைமையில், டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் என, 100 பேர் அடங்கிய குழுவினர், மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருடன் இணைந்து, மதுக்கடை பாரில் ரெய்டு நடத்தினர். நேற்று மட்டும்், 20 பார் ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அனுமதியற்ற பார்கள் மூடப்பட்டன. 'இன்றும், ரெய்டு தொடரும்' என, எதிர்பார்க்கப்படுகிறது.
பா.ஜ., நிர்வாகிகள் தேர்வு
திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., செயற்குழு கூட்டம், இடுவம்பாளையத்தில் நடந்தது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட, மாவட்ட நகர பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.நகர தலைவராக இருந்த வினோத், மாவட்ட தலைவராகவும், மாவட்ட இளைஞரணி செயலாளராக இருந்த வேலுசாமி, நகர தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.பல்லடம் பா.ஜ., சட்டமன்ற அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், நகர தலைவராக பொறுப்பேற்ற வேலுசாமிக்கு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கிருஷ்ணபிரசாத், வேலுமணி, கமலேஷ் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தேர்தலுக்கு 'ரெடி'
திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில், திருப்பூர் லோக்சபா தொகுதி தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். வடக்கு மாவட்ட தலைவர் சின்னசாமி, கோட்ட பொறுப்பாளர் மணி, தெற்கு தொகுதி அமைப்பாளர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், லோக்சபா தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைப்பது, குறித்து ஆலோசிக்கப்பட்டது.
சலுகை வழங்க வலியுறுத்தல்திருப்பூர் மாவட்ட, கட்டட கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் (சி.ஐ.டி.யு.,) 11வது மாவட்ட மாநாடு பாண்டியன் நகரில் நடந்தது. மாவட்ட தலைவர் உண்ணிகிருஷ்ணன் தலைமை வகித்தார். துணை தலைவர் கணேசன், வரவேற்றார். மாநில தலைவர் சிங்காரவேலு, தொடங்கி வைத்தார்.
மாநாட்டில், கட்டுமான தொழிலாளர் நல வாரிய உதவி தொகையை இரட்டிப்பாக்க வேண்டும். பெண்களுக்கு, 55 வயதில் பென்சன், 3,000 ரூபாய் பென்ஷன் வழங்க வேண்டும். இயற்கை மரண நிதி, ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். போனஸ் திட்டம், இலவச வீட்டு மனை, வீடு கட்ட வட்டியில்லா கடன் திட்டம் அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வாழ்வியல் பயிற்சி முகாம்
திருப்பூர், 15 வேலம்பாளையம் நகர, ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், இலவச பொது மருத்துவ முகாம் ஆத்துபாளையம் ஸ்ரீ காமாட்சியம்மன் பாத்திர தொழிலாளர் சங்க கட்டடத்தில் நடந்தது.
அமைப்பின் தலைவர் நவநீதகிருஷ்ணன், தலைமை வகித்தார். செயலாளர் சின்னசாமி, முன்னிலை வகித்தார். முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, ரத்த சோகை, கொழுப்பு உட்பட பரிசோதனை செய்யப்பட்டது. உணவு பழக்க வழக்கம், வாழ்வியல் மாற்றத்திற்கான ஆலோசனை வழங்கப்பட்டது.
மின்வெட்டு: அமைச்சருக்கு கடிதம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை தலைவர் அம்சா, மின் துறை அமைச்சருக்கு அனுப்பிய கடிதம்:திருப்பூர் மற்றும் சுற்றுப்புறத்தில், சமீபகாலமாக, மின் வெட்டு ஏற்படுகிறது. பல காரணங்களால், பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு, ஆடை உற்பத்தி நடந்து வருகிறது. ஆனால், அடிக்கடி மின்வெட்டால், உற்பத்தி இழப்பு ஏற்பட்டு, 'ஆர்டர்'களை உரிய நேரத்தில் முடிக்க முடியாத நிலை காணப்படுகிறது. மின்வெட்டு தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' எனக் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X