கடன் தருவதாக நூதன மோசடி | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடன் தருவதாக நூதன மோசடி

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வெள்ளக்கோவில்:வெள்ளக்கோவில் பகுதியில் கோடிக்கணக்கான ரூபாய் கடன் தருவதாக முன் பணம் பெற்று நூதன மோசடி நடந்து வருகிறது.
முயல் பண்ணை, ஈமு கோழி, நாட்டுக் கோழிப் பண்ணை, இரிடியம் வியாபாரம், லட்ச ரூபாய்க்கு மாதம், 15 ஆயிரம் ரூபாய் வட்டி போன்ற மோசடி தொடர்ந்து, புதிதாகக் குறைந்த வட்டிக்கு கோடிக்கணக்கான ரூபாய் கடன் தருவதாக மோசடி பரவி வருகிறது.கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம் மாவட்டங்களில் இந்த மோசடி தலைதூக்கி உள்ளது. சொத்துப் பத்திரத்தின் ஜெராக்ஸ் கொடுத்தால் போதும் ஒரு கோடி முதல் 4 கோடி ரூபாய் வரை கடன் தருவதாகவும், 15 வருடங்களில் திருப்பிச் செலுத்தலாம் எனவும் கூறப்படுகிறது.இதற்கு முன் பணமாக, 3 லட்சம் ரூபாய் மட்டும் குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளில் செலுத்தக் கூறப்படுகிறது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X