அறிவியலுடன் இணைந்த ஜோதிடத்துக்கு அழிவில்லை!தெளிவுபடுத்தும் காழியூர் நாராயணன்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அறிவியலுடன் இணைந்த ஜோதிடத்துக்கு அழிவில்லை!தெளிவுபடுத்தும் காழியூர் நாராயணன்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

'மேஷ ராசி நேயர்களே...' என, காலை வேளையில், சின்னத்திரையில் ஒலிக்கும் ராசி பலனும், தினசரி பத்திரிக்கையில், ஒரே வரியில் அச்சிடப்படும், ராசிக்கான பலனும் தான், ஒரு முழு நாளுக்கான ஆறுதலாக, வழிகாட்டியாய் பலருக்கும் இருக்கிறது.வளர்ந்துவிட்ட அறிவியல் யுகத்தில், அறிவியலும், கணிதமும் கலந்த ஜோதிடத்தை, மெத்த படித்த மேதாவிகள் துவங்கி, படிக்காத பாமரர்கள் வரை நம்புகின்றனர் என்பது, யதார்த்தம்.ஜோதிடம் சொல்வதில் ஜொலிப்பவர் காழியூர் நாராயணன். 'கோள்களின் இயக்கம், கொண்டாட வைக்குமா, திண்டாட வைக்குமா?' என்ற பட்டிமன்ற கேள்விக்கு, கனகச்சிதமாக கணித்து
பலன் கூறுவதில் அவருக்கு நிகர் அவரே.
திருப்பூர், திருவருள் ஜோதிட நிலையம் சார்பில் நடந்த குருபெயர்ச்சி வழிபாட்டில், பங்கேற்ற அவர், 'தினமலர்' நாளிதழுக்காக, தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
ஜோதிடத்தின் தோற்றம் குறித்து...
ஐரோப்பியாவில் இருந்து பல நாடுகள் வழியாக, அல்துமஸ் என்பவரின் தலைமையில் ஒரு குழு, இந்தியா வந்தது. அக்கால கட்டத்தில், நாகரிகம் வளரவில்லை. வானில் தோன்றும் நட்சத்திரங்களை கணித்து, எங்கு போனால் தண்ணீர் கிடைக்கும், உணவு கிடைக்கும் என, கணித்தனர்; அல்துமஸ் என்பவர் தான் உலகின் முதல் ஜோதிடர். ராசி பலன், உண்மையில் பலன் அளிக்குமா?ராசிபலன் பார்க்காமல், சிலர், எந்த வேலையையும் துவக்குவதில்லை; அது, அனைவருக்கும் பொருந்தும் ஒரு விஷயம். ராசிபலன் மூலம் நல்வார்த்தை கூறுவது, அந்தந்த ராசிக்காரர்களுக்கு ஊக்கம், உற்சாகத்தை அளிக்கிறது.
ஜோதிடம் பார்ப்பதால்என்ன பிரயோஜனம்?
கண்டிப்பாக லாபம் தான். தங்கள் எதிர்காலத்தின் மீது தன்னம்பிக்கை பிறக்கும். அன்றைய தினத்தை சந்தோஷமாக வைக்க உதவும்.

ஜோதிடர் கூறுவது அப்படியே பலிக்குமா?
தெய்வ அனுக்கிரஹம் இருந்தால், வாக்கு பலிக்கும். ஜோதிடம் பலிக்காது என்றால் பலிக்காது; பலிக்கும் என்றால் பலிக்கும்; அவ்வளவு தான். அனுபவ அடிப்படையில், சாஸ்திர ரீதியாக ஜோதிடம் கூறுவது பலிக்கும். ஜோதிடர்கள் கடவுள் அல்ல; மனிதர்கள் தான். அதை பிரித்து உணர்த்தும் வகையில், சில நேரம் ஜோதிடம் பலிக்காமல் போகலாம்.ஜோதிடத்தை நம்ப வேண்டும்; ஜோதிடத்தையே நம்பியிருக்க கூடாது. அதே போன்று, தெய்வத்தை நம்பலாம்; தெய்வத்தை மட்டுமே நம்பியிருக்க கூடாது.
வெளிநாடுகளில்ஜோதிடம் இருக்கிறதா...
உலகம் முழுக்க ஜோதிடம் இருக்கிறது. ஜப்பான், ஸ்பெயின் நாடுகள், தொழிலாளர்களின் ஜாதகத்தை கணித்து, அதன் பலன் அடிப்படையில் பணி வழங்குகின்றன. அந்நாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கும், நான் ஜோதிட ஆலோசகராக உள்ளேன்.
வாஸ்து பார்ப்பது,சரியாக வருமா?
தொழில்துறைக்கான, 'இன்டஸ்ட்ரியல் அஸ்ட்ராலஜி', மருத்துவத்துக்கான, 'மெடிக்கல் அஸ்ட்ராலஜி', குற்றவாளிகளை கண்டறிவது என, பல துறைகளிலும் ஜோதிடம் வியாபித்துள்ளது. கிரகங்களின் தன்மை, திசை அடிப்படையில் வாஸ்து பார்ப்பதும், ஒரு வகை ஜோதிடமே.
ஓலைச்சுவடி முறை சரியானதா?
நம் நாட்டில் இருந்த ஓலைச்சுவடியில், 10 சதவீதம் மட்டும் கிடைத்துள்ளன; அதில், 4 சதவீதம் மட்டுமே படிக்கும் நிலையில் இருந்தன. புதியதாக ஓலைச்சுவடி எழுதி, மண்பானையில் வைத்து சுட்டு, 'பழமையானது' எனக்கூறி, திசை திருப்பப்படுகிறது. விஞ்ஞானத்துடன் தொடர்புள்ள, ஜோதிடக்கலைக்கு என்றும் அழிவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X