'மதுக்கடை வேண்டாம்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'மதுக்கடை வேண்டாம்'

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அனுப்பர்பாளையம்:சிறுபூலுவப்பட்டியில் திறக்கப்பட்ட மதுக்கடையை அகற்ற வேண்டுமென குடியிருப்போர் நல சங்கத்தினர் வலியுறுத்தினர்.
திருப்பூர், சிறுபூலுவப்பட்டி ரோடு, அமர்ஜோதி கார்டன் அருகில், மதுக்கடை (எண்: 1983) ஒன்று சமீபத்தில் திறக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி குடியிருப்போர் நல சங்கத்தினர் மற்றும் அனைத்து கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், மதுக்கடை மூடப்பட்டது.இந்நிலையில், மூடப்பட்ட மதுக்கடை மீண்டும் திறக்கப்பட்டது. இதனால், குடியிருப்போர் நல சங்கத்தினர் அதிர்ச்சியடைந்து, மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரசாரம் செய்து வருகின்றனர்.
அப்பகுதியினர் கூறுகையி்ல், 'இப்பகுதியில் அதிக அளவில் வீடுகள், பனியன் நிறுவனங்கள் உள்ளன. 'குடி'மகன்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவர். மேலும், விபத்தும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.'எனவே, மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி, எம்.எல்.ஏ, மற்றும் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம். அதன்பின்னரும், கடை இருந்தால், தொடர் போராட்டம் நடத்துவோம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X