பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை:ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை:ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

உடுமலை:உடுமலை, குடிமங்கலம் ஒன்றியங்களில், அரசுத்துறை அலுவலகங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு, அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.அரசு அறிவிப்பின்படி, 2019ம் ஆண்டு ஜன., மாதம் முதல் ஒரு முறை பயன்படக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்படுகிறது. இதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக, கிராம சபைக்கூட்டங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பள்ளி வளாகங்களில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, சுற்றுச்சூழல் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.இவ்வாறு, பிளாஸ்டிக் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்ட பள்ளிகளில், 'பிளாஸ்டிக் இல்லாத பள்ளி வளாகம்', என்ற அறிவிப்பு பலகைகளை வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இதனை பள்ளிகளும் பின்பற்ற துவங்கியுள்ளன.மேலும், அரசுத்துறை அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், இந்த அறிவிப்பு பலகைகளை வைக்க வேண்டுமென, அரசு அறிவித்துள்ளது. இதன்படி, உடுமலையில் நெடுஞ்சாலைத்துறை, ஊராட்சி அலுவலகங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.மேலும், திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், ஒன்றிய அதிகாரிகளுக்கு, உத்தரவிடப்பட்டுள்ளது. அதில், உள்ளாட்சித்துறை அலுவலகங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாமல் பராமரித்தல், பொதுமக்கள் கூடும் இடம், சந்தை வளாகங்களில், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்.வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு கூட்டம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பிளாஸ்டிக் இல்லாத பொருட்களை தயார் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டுமெனவும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X