சோமவாரப்பட்டி பள்ளியில் மூளைக்காய்ச்சல் விழிப்புணர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சோமவாரப்பட்டி பள்ளியில் மூளைக்காய்ச்சல் விழிப்புணர்வு

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

உடுமலை:குடிமங்கலத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் சார்பில், மூளைக்காய்ச்சல் தொடர்பாக பெற்றோருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.குடிமங்கலம், சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. வட்டாரக் கல்வி அலுவலர் பூங்கொடி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் நித்யா நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் பெற்றோர், மற்ற குழந்தைகளின் பெற்றோர், சுய உதவிக் குழுவினர், அங்கன்வாடி பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், மூளைக்காய்ச்சல் ஏற்படுவதன் காரணம், கட்டுப்படுத்தும் வழிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மேலும், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சட்டங்கள், அரசின் உதவித்திட்டங்கள், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான வாழ்வாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வட்டார வள மைய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X