பண்ணை மேலாண்மை விவசாயிகளுக்கு பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பண்ணை மேலாண்மை விவசாயிகளுக்கு பயிற்சி

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

உடுமலை:உடுமலை அருகே, விவசாயிகளுக்கு, படைப்புழு தாக்குதல், கறவை மாடுகளுக்கான பண்ணை மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.கோவை, வேளாண்பல்கலை மாணவர்கள் கிராமத்தங்கல் திட்டத்தின் கீழ், உடுமலை ஜல்லிபட்டி கிராமத்தில் தங்கி, விவசாய நிலங்களில் களப்பயிற்சி பெற்று வருகின்றனர். மக்காச்சோளத்தை தாக்கும் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த, மண் கரைசலை குருத்தில் ஊற்ற வேளாண்துறை பரிந்துரைத்துள்ளது. இதனை, படைப்புழு தாக்கிய வயல்களில் மாணவர்கள் பயிற்சி அளித்தனர்.
பண்ணை மேலாண்மை: கரட்டுமடத்தில், கறவை மாடுகளுக்கான பண்ணை மேலாண்மை குறித்து, விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது. கால்நடை அறிவியல் பல்கலை ஆராய்ச்சி பிரிவு தலைவர் மதிவாணன், கால்நடைத்துறை துணை இயக்குனர் குழந்தைசாமி உள்ளிட்டோர் விவசாயிகளுக்கு விளக்கினர். பல்கலை மாணவர்கள் மண்ணில்லா தீவன வளர்ப்பு மற்றும் கோடை காலங்களில் தீவன பற்றாக்குறையை தீர்க்க, அசோலா மற்றும் ஊறுகாய்ப்புல் உற்பத்தி குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X