ஒருங்கிணைந்த மார்க்கெட் வளாகம் அமைக்க...மாற்றி யோசித்தால்... மாற்றம்!அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல திட்டம்| Dinamalar

தமிழ்நாடு

ஒருங்கிணைந்த மார்க்கெட் வளாகம் அமைக்க...மாற்றி யோசித்தால்... மாற்றம்!அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல திட்டம்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சியில், ஒருங்கிணைந்த மார்க்கெட் வளாகம் அமைக்க நடவடிக்கை எடுத்தால், விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் பயனடைவார்கள். அதனால், அதற்கான, திட்டத்தை நகராட்சி நிர்வாகம் உருவாக்க வேண்டும்.
பொள்ளாச்சி நகராட்சிக்கு சொந்தமான காந்தி வாரச் சந்தை 30.78 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு, ஆடுவதை செய்யுமிடம், லாரிப்பேட்டை, மாட்டுச்சந்தை, ஆட்டுத்தோல் விற்பனை, வெல்லம் மார்க்கெட், பழைய இரும்பு மார்க்கெட், தினசரி காய்கறி மார்க்கெட்டுகள் செயல்படுகின்றன.
பெரும் பரப்பில் செயல்படும் காந்தி வாராந்திரச் சந்தை மிகவும் புகழ் பெற்றது. அதிலும், வாரந்தோறும் வியாழக்கிழமையில் கூடும் சந்தைக்கு தனி மவுசு இருந்தது. காலப்போக்கில், வாரச் சந்தை செயல்பாடு குறுகிய இடத்தில் பெயரளவுக்கு நடக்கிறது.சந்தையில், தினசரி மற்றும் மொத்த காய்கறி மார்க்கெட் மட்டும் புதுப்பிக்கப்பட்டன. சந்தை செயல்படாத இடங்கள் தற்போது காலியிடமாக உள்ளது.
இந்நிலையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட் போன்று, ஒருங்கிணைந்த மார்க்கெட் வளாகமாக மாற்றியமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது பொள்ளாச்சி நகர வாசிகளின் கோரிக்கையாக உள்ளது.பொள்ளாச்சியில் பரவலாக உள்ள அனைத்து மார்க்கெட்களையும் ஒரே இடத்தில், ஒருங்கிணைத்து திட்டமிட வேண்டும். ஒருங்கிணைந்த வளாகத்துக்குள் அனைத்து கடைகளும் வந்து விட்டால், பொதுமக்களுக்கும் பயன் அளிக்கும்.
ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்களையும், ஒருங்கிணைந்த மார்க்கெட் வளாகத்தில் இருந்து இயக்கலாம். இதன் மூலம், பொள்ளாச்சி நகரினுள் நிலவும் வாகன நெரிசலை கட்டுப்படுத்த முடியும். ரயில்வே ஸ்டேஷன் அருகில் இருப்பதால், காய்கறிகள் வெளியிடங்களுக்கு எளிதாக கொண்டு செல்ல முடியும் என்கின்றனர் பொதுநல ஆர்வலர்கள்.தொழில்வர்த்தக சபை தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:காந்தி மார்க்கெட்டில், காய்கறிகள் விலை இல்லாத போது இருப்பு வைத்து விற்பனை செய்ய, குளிர்பதன கிடங்கு வசதி ஏற்படுத்த வேண்டும். அதில், அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி, பராமரிக்க திட்டமிட வேண்டும்.
மார்க்கெட்டுக்கான கட்டட வசதி, இருப்பு வைக்கும் அறைகள், பாங்க், ஏ.டி.எம்., உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த வேண்டும். ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வரும் மக்களின் வசதிக்காக பஸ் ஸ்டாண்டும் அமைக்கலாம்.
நகருக்குள் நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், ஆனைமலை, கோட்டூர் வழித்தட பஸ்களை சந்தை வளாகத்தில் இருந்து இயக்கலாம். இது குறித்து, தொழில் வர்த்தக சபை சார்பில் அரசிடம் வலியுறுத்தப்படும். இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X