வன உயிரின வார விழா: விழிப்புணர்வு பேரணி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வன உயிரின வார விழா: விழிப்புணர்வு பேரணி

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அடுத்த, நல்லட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், வன உயிரின வாரவிழா நடந்தது.பள்ளி தலைமையாசிரியை செல்விராணி தலைமை வகித்தார். விழாவில், பள்ளி வளாகத்தில் வளரும் பல்லுயிர் தாவரங்கள், மூலிகை செடிகள், மரவகைகள், மரங்களில் தங்கும் பறவைகள், பூச்சிகள் ஆகியன இனவாரியாக மாணவர்கள் கணக்கிட கற்றுத்தரப்பட்டது.
மரங்களின் பயன்கள், மரத்தை வெட்டுவதால் அவற்றை நம்பி வாழும் பறவைகள், பூச்சிகள் மற்றும் சிட்டுக்குருவிகளின் வாழ்வாதாரம் அழிவது பற்றி தெரிவிக்கப்பட்டது. மனித வாழ்க்கைக்கு வனமும், வன உயிரினங்களும் மிகவும் அவசியம். அதனால், வனத்தையும், வன உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டும் என, மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. மாணவர்கள் பேரணியாக சென்று, வனம், வன உயிரினங்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X