மேம்பாலம் அருகே 'ரெட் அலர்ட்':வாகன ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மேம்பாலம் அருகே 'ரெட் அலர்ட்':வாகன ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவில், நான்கு வழிச்சாலை மேம்பால பணி நடப்பதால், ரோட்டில் அமைக்கப்பட்ட தடுப்புகள் வாகனங்களுக்கு தெரியும் வகையில், சிவப்பு நிற விளக்குகள் அமைத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி அடுத்த ஆச்சிபட்டியில் இருந்து, கோவை ஈச்சனாரி வரையிலான, நான்குவழிச்சாலை திட்டத்தில், கான்கிரீட் ரோடு அமைக்கும் பணிகள் வேகமாக நடக்கிறது.கிணத்துக்கடவில் அமைக்கப்படும், 1.9 கி.மீ., நீளமுள்ள மேம்பாலப் பணிகள், 85 சதவீதம் நிறைவடைந்துள்ளன. மூன்று துாண்களை இணைத்து ஓடுதளம் அமைக்கும் பணியும், கோவை மார்க்கமாக அணுகுபாலம் அமைக்கும் பணியும் நிலுவையில் உள்ளது.இப்பகுதியில், கான்கிரீட் கர்டர் அமைக்கும் பணியும், அதன் மீது கான்கிரீட் தளம் அமைக்கும் பணியும் இரவு பகலாக நடக்கிறது.
பாலத்தின் கீழ், இருபக்கமும் வாகனங்கள் செல்ல சர்வீஸ் ரோடு அமைக்கப்படுகிறது. மேம்பால கட்டுமான பணி நடக்கும் இடத்தில், தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது தெரியாமல், சில வாகனங்கள் வேகமாக கடப்பதால், விபத்து ஏற்படுகிறது.இதை தடுக்கும் வகையில், ரோட்டோர தடுப்புகளை தாண்டி, வாகனங்கள் உள்ளே வராமல் இருக்க, இரவு நேரங்களில் சிவப்பு நிறத்தில் விளக்குகள் ஒளிர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதனால், பாலத்தின் மேற்கு பகுதியில் வரும் வாகனங்கள், மிக எச்சரிக்கையுடன் மெதுவாக, குறிப்பிட்ட இடத்தை கடக்கின்றன. இதனால், மேம்பாலப் பணியும் இடையூறின்றி மேற்கொள்ளப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X