பள்ளி மாணவர்கள் ரசிக்க பழங்கால பொருள் கண்காட்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவர்கள் ரசிக்க பழங்கால பொருள் கண்காட்சி

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு விவேக் வித்யாலயா பள்ளியில், பழங்கால பொருள்களின் கண்காட்சி நடந்தது.பொள்ளாச்சி சேரன்நகரை சேர்ந்தவர் ஜாய்சேகர்; கோவையில் வருமான வரித்துறை அலுவலராக பணியாற்றுகிறார். விளையாட்டு வீரரான இவர், பழங்கால பொருள்கள் சேகரிப்பிலும் ஆர்வம் கொண்டுள்ளார்.
இவர் சேகரித்த பழங்கால பொருள்களை, பள்ளி மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகையில், கண்காட்சி நடத்தி வருகிறார்.கிணத்துக்கடவு விவேக் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களின் கண்காட்சிக்காக பழங்கால பொருளாக வைத்துள்ளார். பள்ளி தலைமையாசிரியர் சுந்தரகிரி தலைமை வகித்தார்.
மன்னர் காலத்து நாணயங்கள், ஜெர்மன், சுவட்சர்லாந்து நாட்டு கைக்கடிகாரங்கள், அரிய வகை ருத்ராட்சங்கள், பித்தளையிலான பழங்கான டெலிபோன் உபகரணங்கள், வெள்ளையர் மற்றும் மன்னர் கால கலைப் பொருள்கள், தந்தத்தில் ஆன சிற்பங்கள் கண்காட்சியில் இடம் பெற்றன.மாணவர்கள் ஆர்வத்துடன் கண்காட்சியை கண்டு ரசித்ததோடு, பொருள்களின் விபரங்கள், உயோகப்படுத்திய ஆண்டுகளை கேட்டறிந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X