நெகமம் அருகே கால்வாய் தகராறில் மோதல்:தந்தை, மகனுக்கு தலா, 7 ஆண்டுகள் சிறை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நெகமம் அருகே கால்வாய் தகராறில் மோதல்:தந்தை, மகனுக்கு தலா, 7 ஆண்டுகள் சிறை

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நெகமம்:பொள்ளாச்சி அருகே, நிலத்தகராறில் பக்கத்து தோட்ட உரிமையாளரையும், தடுக்க வந்தவரையும் மண் வெட்டியால் தாக்கிய, தந்தை, மகனுக்கு, தலா ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நெகமம் அடுத்த, வடசித்துார் - செல்லப்பகவுண்டன்புதுாரை சேர்ந்தவர் மயில்சாமி, 75. இவருக்கும், பக்கத்து தோட்டத்துக்காரர்களான சக்திவேல், 65, அவரது மகன் செந்தில்குமார், 35, ஆகியோரிடையே பாசன கால்வாய் தகராறு இருந்து வந்தது.கடந்த 2013, நவ., 3ம் தேதி காலை, இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், கைகலப்பு ஏற்பட்டது. இதில், மண்வெட்டி கைப்பிடியால் தாக்கிக் கொண்டனர்.சம்பவத்தில், மயில்சாமி படுகாயமடைந்தார். மோதலை தடுக்க முயன்ற மயில்சாமியின் உறவினரான கண்டியப்பனும் தாக்கப்பட்டார்.
நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பொள்ளாச்சி சப் -- கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, குற்றம் சாட்டப்பட்ட சக்திவேல், அவரது மகன் செந்தில்குமார் ஆகியோருக்கு, தலா, ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X