உடுமலை ஏழுமலையானை 35 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உடுமலை ஏழுமலையானை 35 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

உடுமலை:உடுமலை ஏழுமலையான் கோவிலில், கடைசி புரட்டாசி சனிக்கிழமையான நேற்று, 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
உடுமலை, மூணாறு ரோட்டில், மேற்கு தொடர்ச்சிமலை, உடுமலை வனச்சரக பகுதியில் ஏழு மலையான் கோவில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து, 2,500 மீட்டர் உயரத்தில், அமைந்துள்ள இக்கோவிலில், புரட்டாசி சனிக்கிழமைகள் மட்டும், பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது.புரட்டாசி கடைசி சனிக்கிழமையான நேற்று முன்தினம், இரவிலிருந்தே, பக்தர்கள் மலைக்கு வரத்துவங்கினர். கரடு, முரடான மலைப்பாதையில், ஏழு கிலோ மீட்டர் துாரம், பக்தர்களின் 'கோவிந்தா' கோஷம் ஒலித்தது. கடந்த மூன்று வாரமாக, தலா, 25 ஆயிரம் பக்தர்கள் வரை வந்தனர். நேற்று, 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர்.
நேற்று அதிகாலை சுவாமிக்கு, பல்வேறு திரவியங்களில் சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X