அஞ்சல் தலை சேகரிப்பு கண்காட்சி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அஞ்சல் தலை சேகரிப்பு கண்காட்சி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருச்சி: அஞ்சல் தலை சேகரிப்பு தினத்தை முன்னிட்டு, திருச்சி தலைமை அஞ்சலகத்தில், அஞ்சல் தலை சேகரிப்பு பிரிவில், நிரந்தரமாக அஞ்சல் தலை காட்சிப்படுத்தும் பலகை வைக்கும் விழா நடந்தது. மகாத்மா காந்தியின், 150வது பிறந்த தினத்தை முன்னிட்டு, தபால் தலை கண்காட்சி நடந்தது. மகாத்மா காந்தி வரலாற்றினை, சிந்தனைகளை அறியும் வகையில், அஞ்சல் தலைகளை காட்சிப்படுத்தியதாக, தாமோதரன் முதல் இடம், யோகா ஆசிரியர் விஜயகுமார் இரண்டாம் இடம், எஸ்.பி.ஐ.ஓ.ஏ., பள்ளி மாணவர்கள் மூன்றாம் இடமும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு, இந்திய மேலாண்மை கழக இயக்குனர் பீமராயி மேத்ரி, திருச்சி மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் அம்பேஷ் உபமன்யூ, மத்திய மண்டல இயக்குனர் தாமஸ் லூர்து ராஜ் உள்ளிட்டோர் பரிசுகளையும், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X