புகார் பெட்டி - சேலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - சேலம்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குண்டும், குழியுமான சாலையால் விபத்து: சேலம், நகரமலை அடிவாரம் செல்லும் சாலையில், பாதாள சாக்கடை திட்டத்துக்கு, பள்ளம் தோண்டிய பின், மீண்டும் சீரமைக்கப்படாததால், குண்டும், குழியுமாக உள்ளது. இங்குள்ள தனியார் பள்ளியில், 2,000க்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். சாலை மோசமாக உள்ளதால், பள்ளிக்கு வரும் மாணவர்கள், பெற்றோர் விபத்துக்குள்ளாவது வாடிக்கையாகிவிட்டது. இதுகுறித்து, பலமுறை கோரிக்கை விடுத்தும், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

- ஆர்.வினோத், நகரமலை அடிவாரம்.

கழிப்பிடமின்றி பெண்கள் அவதி: சங்ககிரி, நல்லப்பநாயக்கன் தெருவில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். இங்கு, பொது கழிப்பிடம் இல்லாததால், சாலையோரம், மக்கள் திறந்தவெளியில் செல்லும் அவலம் நீடிக்கிறது. இதனால், துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. பெண்கள், இரவில் மட்டும் கழிப்பிடம் செல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து, ஊராட்சி அதிகாரிகளிடம், பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

- கே.ரமேஷ்குமார், சங்ககிரி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X