விவசாயிகள் தினம் மரக்கன்று நடும் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் தினம் மரக்கன்று நடும் விழா

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆத்தூர்: சர்வதேச விவசாயிகள் தினம் மற்றும் பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, ஆத்தூர் ரயில்வே ஸ்டேஷனில், 'குளோபல் நீட்ஸ்' அகாடமி சார்பில், மரக்கன்று நடும் விழா, நேற்று நடந்தது. அகாடமி தலைவர், ஓய்வு பெற்ற பேராசிரியர் பெரியசாமி, குமரகுரு வேளாண் கல்லூரி மாணவியர் உள்ளிட்டோர், 100 மரக்கன்றுகளை நட்டனர். அதேபோல், ஆத்தூர், துளுவ வேளாளர் நர்சரி பள்ளியில், விவசாயிகள் தினம் மற்றும் வனவிலங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அதில், ஓய்வு பெற்ற மாவட்ட வன அலுவலர் மணி, ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடம், மரங்கள் வளர்ப்பதன் பயன்கள் குறித்து எடுத்துரைத்தார். தலைமையாசிரியை திலகவதி, ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X