ஜன., 4ல் இறுதி வாக்காளர் பட்டியல்: சுருக்கமுறை திருத்த ஆய்வில் தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜன., 4ல் இறுதி வாக்காளர் பட்டியல்: சுருக்கமுறை திருத்த ஆய்வில் தகவல்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: வரும் ஜன., 4ல், வாக்காளர் இறுதிபட்டியல் வெளியிடப்படுகிறது என, சிறப்பு சுருக்கமுறை திருத்த ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம், கலெக்டர் அலுவலகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் குறித்த ஆய்வு கூட்டம், நேற்று நடந்தது. வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டில் தலைமை வகித்தார். அதில், கலெக்டர் ரோகிணி பேசியதாவது: மாவட்டத்தில், 1,152 மையங்களில், 3,288 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. கடந்த, செப்., 1ல் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில், 28 லட்சத்து, 34 ஆயிரத்து 57 வாக்காளர்கள் உள்ளனர். அடையாள அட்டை பெற்றுள்ள, 35 ஆயிரத்து, 59 மாற்றுத்திறனாளிகளில், 15 ஆயிரத்து, 891 பேர் மட்டுமே, வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மீதமுள்ள, 19 ஆயிரத்து, 168 பேரை, வாக்காளர்களாக பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நவ., 1ல் இருந்து, ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களால் பெறப்பட்ட படிவங்கள் மீது, களஆய்வு நடத்தி, தகுதி அடிப்படையில் சேர்த்தல், நீக்கல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல், 2019 ஜன., 4ல் வெளியிடப்படும். இவ்வாறு அவர் பேசினார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, கலெக்டர் அலுவலக வளாகத்தில், வாக்காளர் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தை, கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X