ஊராட்சியில் மேற்கொண்ட பணிகள்; நிதி வழங்காததால் செயலர்கள் புலம்பல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சியில் மேற்கொண்ட பணிகள்; நிதி வழங்காததால் செயலர்கள் புலம்பல்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

பனமரத்துப்பட்டி: ஒரே மாதத்தில், தனி அலுவலர் இடமாற்றம் செய்யப்பட்டதால், ஊராட்சிகளில் மேற்கொண்ட பணிகளுக்கு, நிதி வழங்கப்படாததால், செயலர்கள் புலம்புகின்றனர்.
பனமரத்துப்பட்டியில், தலைவர்களின் பதவி காலம், 2016 அக்டோபரில் முடிந்தது. தனி அலுவலர்(பி.டி.ஓ., கிராம ஊராட்சி) மூலம் மக்களுக்கு அடிப்படை வசதி செய்து தரப்படுகிறது. தலைவரிடம் இருந்த, காசோலை அதிகாரம், தனி அலுவலரிடம் வழங்கப்பட்டது. பனமரத்துப்பட்டியில், தனி அலுவலராக பணிபுரிந்த விஜயலட்சுமி, செப்., 5ல், வீரபாண்டிக்கு மாற்றப்பட்டார். செப்., 9ல், சென்னகிருஷ்ணன் தனி அலுவலராக பொறுப்பேற்றார். அவர் வீடு, ஜலகண்டாபுரத்தில் உள்ளது. அங்கிருந்து, தினமும் பனமரத்துப்பட்டிக்கு வரமுடியவில்லை என்பதால், அதே மாதம், 30ல், கொளத்தூருக்கு மாறுதலாகி சென்றார். கொங்கணாபுரத்திலிருந்த சேகர், பனமரத்துப்பட்டிக்கு மாற்றப்பட்டார். அவர், இதுவரை பொறுப்பேற்கவில்லை. ஒரே மாதத்தில், தனி அலுவலர் மற்றப்பட்டதால், ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு செலவினங்களுக்கு பணம் வழங்குவதில், இழுபறி ஏற்பட்டுள்ளது.

ஊராட்சி செயலர்கள் கூறியதாவது: குடிநீர், தெருவிளக்கு பராமரிப்பு, குப்பை அகற்றுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குடிநீரை குளோரினேஷன் செய்ய, சுகாதார பணிகளுக்கு மருந்து பெறப்பட்டுள்ளது. செப்டம்பர் தொடக்கத்தில், விஜயலட்சுமி மாற்றப்பட்டார். அவர், செய்யப்பட்ட பணிகளுக்கு நிதி வழங்காமல் சென்றுவிட்டார். அடுத்து வந்த சென்னகிருஷ்ணன் இடமாறுதலாகி செல்வதில், குறியாக இருந்ததால், ஊராட்சி நிர்வாக பணிகளுக்கு, நிதி வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. அடுத்து வரும் தனி அலுவலர், ஏற்கனவே செய்யப்பட்ட பணிகளுக்கு நிதி வழங்குவாரா என சந்தேகம் உள்ளது. ஒன்றிய பொறியாளரின் ஒப்புதல் பெற்று, செய்த பணிகளுக்கு கூட நிதி வழங்காமல் அலையவிடுகின்றனர். எங்களுக்கு, செப்டம்பர் சம்பளமே இன்னும் வழங்கப்படவில்லை. இதனால், கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X