கரடு முரடான பாதை: மாணவர்கள் பாவம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கரடு முரடான பாதை: மாணவர்கள் பாவம்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சங்ககிரி: பள்ளிக்கு செல்லும் பாதை, கரடு, முரடாக உள்ளதால், மாணவர்கள் அவதிக்குள்ளாகின்றனர். சங்ககிரி, நாகிசெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். கிராம பகுதியில் இருந்து வரும் பெரும்பாலானோர், சைக்களில் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். அங்கு, நாகிசெட்டிப்பட்டி சாலையிலிருந்து, பள்ளி வரை, ஒரு கி.மீ., தூரம், மண்பாதையில் குன்றுகள் நிறைந்து, கரடு, முரடாக உள்ளது. இதனால், சைக்கிளில் வரும் மாணவர்கள், கற்கள் மீது ஏறிச்செல்லும்போது, சறுக்கி விழுந்து காயம் அடைகின்றனர். மேலும், சாலையோரம் புதர்மண்டி கிடப்பதால், விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால், மாணவர்கள் அச்சத்துடனே பள்ளிக்கு சென்று வருகின்றனர். ஒன்றிய ஆணையாளர் ராஜா கூறுகையில், ''நாகிசெட்டிப்பட்டி பள்ளிக்கு செல்லும் சாலை, 14வது நிதிக்குழு திட்டத்தில், தார்ச்சாலையாக அமைக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் விட்டு, ஒரு வாரத்தில் பணி தொடங்கும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X