குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தை அரசு கட்டடத்துக்கு மாற்ற முடியாமல் தவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தை அரசு கட்டடத்துக்கு மாற்ற முடியாமல் தவிப்பு

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஓமலூர்: குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தை இடமாற்ற உத்தரவிட்டும், சேவை மையத்தை வழங்க, மக்கள் மறுப்பு தெரிவிப்பதால், அதிகாரிகள் தவிக்கின்றனர்.
சேலம் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் பல ஆண்டுகளாக, வாடகை கட்டடத்தில் செயல்பட்டது. அதில், மகுடஞ்சாவடி, மேச்சேரி, ஓமலூர், பனமரத்துப்பட்டி, தலைவாசல், வீரபாண்டி, ஏற்காடு அலுவலகங்களை, அந்தந்த பி.டி.ஓ.,க்கள் முன்மொழிவின்படி வழங்கப்பட்ட, அரசு கட்டடங்களுக்கு மாற்ற, கலெக்டர் ரோகிணி உத்தரவிட்டார். ஓமலூரில், காசிவிஸ்வநாதன் ஆலயம் எதிரேவுள்ள தெருவில், 2,300 ரூபாய் வாடகையில் செயல்பட்டு வந்த, குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலகத்துக்கு, தாத்தியம்பட்டி சேவை மைய கட்டடம் ஒதுக்கப்பட்டது. ஆனால், அப்பகுதி மக்கள், அந்த கட்டடத்தை பயன்படுத்த, எதிர்ப்பு தெரிவிப்பதாக, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ப்ரியதர்ஷினி தெரிவித்தார். அதேநேரம், போக்குவரத்துக்கு ஏதுவாக, பாதுகாப்பான இடத்தில், அலுவலகத்தை கொண்டுவர, அங்கன்வாடி ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். பி.டி.ஓ., ஜெகதீஸ்வரர் கூறுகையில், ''மாற்று இடம் கேட்டு, கடிதம் வழங்கினால், உயரதிகாரிகளிடம் தெரிவித்து பரிசீலிக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X