பசுமைவீடு கட்டிய பயனாளிகள் பணம் கிடைக்காமல் தவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பசுமைவீடு கட்டிய பயனாளிகள் பணம் கிடைக்காமல் தவிப்பு

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பனமரத்துப்பட்டி: அரசிடமிருந்து, நிதி வராததால், பசுமை வீடு கட்டிய பயனாளிகள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். பனமரத்துப்பட்டியில், 20 கிராம ஊராட்சிகள் உள்ளன. அங்கு, 2017 - 18 நிதியாண்டில், 36 பசுமை வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில், 15 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகள் கட்டுமானப் பணி நடந்து வருகிறது. இந்த பயனாளிகளுக்கு, இரு கட்டங்களாக பணம் வழங்கப்படும். ஆனால், வீடு கட்டியவர்களுக்கு, ஒருமுறை கூட பணம் வழங்கப்படவில்லை. அக்கம், பக்கத்தில், கடன் வாங்கி வீடு கட்டிய அவர்கள், அதை திருப்பி தரமுடியாமல் சிரமப்படுகின்றனர். ஒரு பகுதி தொகை கூட வழங்காததால், பண வசதியில்லாத பயனாளிகள், வீடு கட்டும் பணியை நிறைவு செய்ய முடியாமல் தவிக்கின்றனர். ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'பயனாளிகளுக்கு, அரசிடமிருந்து நிதி ஒதுக்கீடு வரவில்லை. அதனால், ஒரு பகுதி தொகை கூட வழங்க முடியவில்லை. நிதி ஒதுக்கியதும் வழங்கப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X