சிற்றுந்து சேவை நிறுத்தம்: 20 கி.மீ., சுற்றும் பரிதாபம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிற்றுந்து சேவை நிறுத்தம்: 20 கி.மீ., சுற்றும் பரிதாபம்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மகுடஞ்சாவடி: சிற்றுந்து சேவை நிறுத்தப்பட்டதால், மக்கள், 20 கி.மீ., தூரம் சுற்றிச்செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மகுடஞ்சாவடி, ஏகாபுரம் ஊராட்சியிலுள்ள, கலியபாட்டனூர், மோட்டூர், பண்டிதகாரனூர், தைலாம்பட்டி, கரட்டூர், நல்லாரன்பூசாரி வளவு, வடுவன்காடு உள்ளிட்ட பகுதிகளில், 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அவர்கள், ஏகாபுரத்திலிருந்து, மகுடஞ்சாவடி செல்ல, சிற்றுந்து பஸ் வசதி இருந்தது. இரு ஆண்டுகளுக்கு முன், அச்சேவை நிறுத்தப்பட்டது. இதனால், மகுடஞ்சாவடியிலுள்ள பி.டி.ஓ., அலுவலகம், மருத்துவமனை, பள்ளிகள் செல்ல, எட்டிக்குட்டைமேடு சென்று, அங்கிருந்து, 20 கி.மீ., தூரம் சுற்றிச்செல்ல வேண்டியுள்ளது. இதனால், மக்கள், கூலி வேலைக்கு செல்வோர், குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும், இப்பகுதியிலிருந்து, 100 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், அ.புதூர், மகுடஞ்சாவடிக்கு செல்ல பஸ் வசதி இல்லாததால், 5 கி.மீ., தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாணவியர், சிறப்பு வகுப்பு முடிந்து, வீடு திரும்பும்போது, இருட்டாகி விடுவதால், அச்சத்துடன் நடந்து செல்கின்றனர். அவர்களுக்கு, பாதுகாப்பற்ற சூழல் உள்ளதால், பஸ் வசதி செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், 'இதுகுறித்து, மக்கள் மனு கொடுத்தால், உயரதிகாரிகளுக்கு அனுப்பி, உரிய ஏற்பாடு செய்யப்படும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X