ஊழல் செய்பவர்களை ஒதுங்கச்சொல்லும் நேரம் வந்து விட்டது: கமல்ஹாசன்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊழல் செய்பவர்களை ஒதுங்கச்சொல்லும் நேரம் வந்து விட்டது: கமல்ஹாசன்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: ''தமிழகத்தில், ஊழல் செய்பவர்களை ஒதுங்கச்சொல்லும் நேரம் வந்துவிட்டது,'' என, சேலத்தில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.
நாமக்கல், சேலம் மாவட்டத்தில், இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நேற்றிரவு, சேலம், கோட்டை மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது: நான் எம்.ஜி.ஆர்., தோளில் தவழ்ந்த பிள்ளை. பின், தனிமைப்படுத்தப்பட்ட என்னை, உங்கள் தோள்களில் நிறுத்திவைத்துள்ளீர்கள். அந்த அரவணைப்பால், எதையும் செய்யும் துணிச்சல் வந்துவிட்டது. ஆளும்கட்சியினரின் ஊழலை சொல்லி புலம்புவதைவிட, ஊழல் செய்பவர்களை, ஒதுங்கச்சொல்லும் நேரம் வந்துவிட்டது. அதற்கான குரல், பலமாக ஒலிக்க வேண்டும். இது, அன்பால் கூடிய கூட்டம். இனி, விலை கொடுத்து வாங்க விட கூடாது. அது, முடியவும் முடியாது. மக்களின் வறுமையை வைத்து விளையாடியவர்கள், இனி வெல்ல கூடாது, நெருங்கவும் கூடாது. இம்முறை, மக்கள் வெல்ல வேண்டும். மக்கள் வெற்றிபெறும் தலைவர்கள், இப்போது இல்லை. இங்கே கூடியவர்கள், ரசிகர்கள் அல்ல; தொண்டர்கள் அல்ல. நாளைய தலைவர்கள். மக்களுக்கு, சேவை செய்யும் பணியாளர்களை, நீங்கள் நியமிக்க வேண்டும். அதை, என் கடமையாகவே மாற்றிக்கொண்டேன். மக்களுக்கு கடமையை செய்தே தீருவேன். அதற்காக, உங்களில் நானாகி விட்டேன். நடிகனாக இருந்த என்னை, மாற்றி விட்டீர்கள். இவ்வாறு பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X