நதிநீர் பிரச்சனைகளை தீர்க்க புதிய சட்டம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

நதிநீர் பிரச்சனைகளை தீர்க்க புதிய சட்டம்

Added : அக் 14, 2018 | கருத்துகள் (15)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
நதிநீர் பிரச்னை, மத்திய அரசு, புதிய சட்டம்

புதுடில்லி : காவிரி உள்பட 13 நதிகள் தொடர்பாக மாநிலங்களுக்கு இடையே நீடிக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழகம் -கர்நாடகா, கோவா-கர்நாடகா, டில்லி-அரியானா உள்பட பல்வேறு மாநில அரசுகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகளும் வழக்குகளும் நீடிக்கின்றன. இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் புதிய சட்டத்தை பார்லி.,ல் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தற்போதுள்ள நதிநீர் வாரியச் சட்டத்திற்கு போதிய அதிகாரம் இல்லாததால், அதனை மாற்றும் வகையில் இந்த புதிய சட்டம் பார்லி குளிர்காலக்கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. புதிய சட்டத்தின்படி இருவேறு குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. நதிநீர் பிரச்சனை உள்ள மாநிலங்களின் முதல்வர்களை உள்ளடக்கிய குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது. காவிரி, கங்கை, சிந்து, கோதாவரி, மகாநதி, மாஹி, நர்மதா, பெண்ணாறு, கிருஷ்ணா, பிரம்மபுத்திரா உள்ளிட்ட நாட்டின் முக்கிய நதிகள் பாயும் பகுதிகளில் டெல்டா வளர்ச்சிக் குழுக்கள் அமைக்கப்படும்.

இக்குழுக்கள் நதிநீர்ப்பங்கீடு தொடர்பான பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் என்றும், நதி பாயும் பகுதிகளில் வளர்ச்சி குறித்து விவாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. தற்போதுள்ள முரண்பட்ட சூழலை மாற்றி மாநிலஅரசுகள் பரஸ்பரம் ஒத்துழைக்கும் சூழலை இந்த அமைப்பு ஏற்படுத்தும் என்றும், முதல்வர்கள் ஆண்டுக்கு இருமுறை சந்தித்துப் பேசி இணக்கமான சூழலை ஏற்படுத்துவார்கள் எனவும் மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramasamy - London,யுனைடெட் கிங்டம்
15-அக்-201801:16:57 IST Report Abuse
Natarajan Ramasamy எந்த நிலையிலும் எந்த மாநிலத்தையும் சரியான வழிக்கு கொண்டுவர வழிவகை செய்யும் சட்டம் இயற்ற வேண்டும். மழை நீர் வீணாக கடலில் கலக்க வேண்டிய நிலை சுதந்திரம் அடைந்தும் 70 வருடங்களாகியும் நீடிக்கிறது. தொலை நோக்கு இல்லாத குறுகிய கண்ணோட்டம் உள்ள தலைவர்களை தேர்ந்து எடுத்த மக்களே காரணம். நமக்கு வேண்டாத பொது , வெள்ள நீரை அளவுக்கு மேல் திறந்துவிடும் மாநிலங்களுக்கு penalty போடவேண்டும்.எப்படி? GST யில் மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய பகுதியில் குறைத்து வெள்ள நீரால் அவதிப்படும் மாநிலங்களுக்கு அந்த penlty பணத்தை தரவேண்டும்.அல்லது இந்த penalty பணத்தை தடுப்பணைகள் கட்டவோ அல்லது நதிநீர் இணைப்புக்கோ உபயோகப்படுத்த வேண்டும். ACCOUNTABILITY & fixing responsibility is missing in this form of DEMOCRACY .
Rate this:
Share this comment
Cancel
14-அக்-201818:28:06 IST Report Abuse
ஆப்புஜி அச்சே தின் ஆனே வாலா ஹைன்...ப்ரதான் மந்திரிக்கீ நதி யோஜனாவில் இப்பவே 200 கோடி பேர் பயனடைஞ்சுட்டாங்க ஹைன்...
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-அக்-201817:42:25 IST Report Abuse
Pugazh V எத்தனை சட்டம் போட்டாலும் கர்நாடக அரசு அது எந்த கட்சி ஆட்சி யாக இருந்தாலும் சட்டத்தை மதிக்கப் போவதில்லை
Rate this:
Share this comment
14-அக்-201822:02:56 IST Report Abuse
வல்வில்அப்போ என்ன கூந்தலுக்கு இங்க வந்து கருத்து சொல்லனும் சார்?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X