மணல் கடத்திய வாகனங்கள் பறிமுதல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்திய வாகனங்கள் பறிமுதல்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோபி: கோபி அருகே மணல் கடத்தியதாக, நான்கு மாட்டு வண்டிகள், ஆம்னி வேன் மற்றும் சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. கோபி தாசில்தார் வெங்கடேஸ்வரன் தலைமையில், வருவாய்த்துறையினர், காசிபாளையம் அருகே, நேற்று அதிகாலை, வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். நான்கு மாட்டு வண்டிகளில், மணல் கடத்திச் சென்றனர். அதிகாரிகள் பறிமுதல் செய்து, தாலுகா அலுவலகம் கொண்டு வந்தனர். இதேபோல், பங்களாப்புதூர் போலீசார், கொங்கர்பாளையம் அருகே, வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆம்னி வேனில், கடத்தி வந்த, 40 மூட்டை மணலை பறிமுதல் செய்தனர். டி.ஜி.,புதூரில், மணல் கடத்தி வந்த சரக்கு ஆட்டோவும் சிக்கியது. வாகனங்கள், போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X